கேன்ஸ் திரைப்பட விழாவில் நடிகை தீபிகா படுகோனே & நடுவர் குழுவின் சிவப்பு கம்பள வரவேற்பு போட்டோக்கள் வெளியாகி உள்ளன.
Also Read | கேன்ஸ் பட விழாவில் 'விக்ரம்' டிரெய்லர் & NFT.. கமல்ஹாசன் வெளியிட்ட வெறித்தனமான அப்டேட்!
ஐஸ்வர்யா என்ற கன்னடப் படத்தின் மூலம் தனது திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கிய தீபிகா படுகோன், 2007 இல் ஷாருக்கான் நடித்த ஓம் சாந்தி ஓம் இந்தி திரைப்படத்தின் மூலம் பிரபலமடைந்தார்.
பின்னர், சஞ்சய் லீலா பன்சாலியின் பாஜிராவ் மஸ்தானி, பத்மாவத் மற்றும் கோலியோன் கி ராஸ்லீலா ராம்-லீலா மற்றும் மறைந்த இர்ஃபான் கான் மற்றும் அமிதாப் பச்சனுடன் பிகு, ரன்பீர் கபூருடன் YJHD, தமாஸா ஆகிய படங்களின் மூலம் இந்தி சினிமாவில் உச்ச நிலையை அடைந்தார். ஹாலிவுட் படமான XXX: Return of Xander Cage படத்திலும் தீபிகா படுகோன் நடித்துள்ளார்.
இந்தாண்டு கேன்ஸ் பட விழா நடுவர் குழுவில் உலக சினிமா பிரபலங்கள் ஆன ஐந்து ஆண்கள் மற்றும் நான்கு பெண்கள் உள்ளனர், இந்த 9 பேர் இந்தாண்டுக்கான பாம் டி'ஓர் விருதுகளின் வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுப்பார்கள். 2017 முதல் கேன்ஸ் திரைப்பட விழாவில் தீபிகா படுகோன் கலந்துகொண்டு வருகிறார். தற்போது நடைபெறும் 75வது கேன்ஸ் திரைப்பட விழாவின் நடுவர் குழுவின் தலைவராக பிரெஞ்சு நடிகர் வின்சென்ட் லிண்டன் இருப்பார்.
ஜூரியில் தீபிகாவுடன் இணைந்து நடிகர்-இயக்குனர் ரெபேக்கா ஹால், நூமி ராபேஸ் மற்றும் இத்தாலிய நடிகர்-இயக்குனர் ஜாஸ்மின் டிரின்கா மற்றும் இயக்குநர்கள் அஸ்கர் ஃபர்ஹாடி, லாட்ஜ் லை, ஜெஃப் நிக்கோல்ஸ் மற்றும் ஜோச்சிம் ட்ரையர் ஆகியோர் உள்ளனர். இந்த ஆண்டுக்கான வெற்றியாளர்களை மே 28 ஆம் தேதி கேன்ஸில் நடைபெறும் விழாவில் நடுவர் குழு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும்.
இந்நிலையில் முதல் நாள் விழாவில் நடிகை தீபிகா படுகோனே, நடுவர் குழுவுடன் சிவப்பு கம்பள வரவேற்பில் கலந்து கொண்டார். கருப்பு நிற சேலையில் தீபிகா தோன்றினார். இதற்கிடையில், தீபிகா படுகோன் கடைசியாக ஷகுன் பத்ராவின் கெஹ்ரையானில் நடித்தார், அதற்கு முன், கபீர் கானின் 83, படத்தில் தனது கணவர் ரன்வீர் சிங்குடன் நடித்தார். தற்போது ஹிருத்திக் ரோஷனுடன் ஃபைட்டர் படத்தையும், ஷாருக்கான் மற்றும் ஜான் ஆபிரகாம் நடிப்பில் பதான் படத்திலும் நடித்துள்ளார். பதான் படம் ஜனவரி 2023 இல் ரிலீசாக உள்ளது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8