மும்பை: நடிகை தீபிகா படுகோனின் அலங்கார ஆடைகளை அமெரிக்க நடிகையுடன் ரசிகர்கள் ஒப்பிட்டுள்ளனர்.
நடிகை தீபிகா படுகோனே தனது வரவிருக்கும் திரைப்படமான கெஹ்ராயானின் டிரெய்லரை சில தினங்களுக்கு முன் வெளியிட்டார், இது பலரையும் கவர்ந்துள்ளது. இருப்பினும், டிரெய்லரைத் தவிர, டிரெய்லர் வெளியீட்டு நிகழ்வின் போது தீபிகாவின் தோற்றம், உடை பற்றி ரசிகர்கள் சமூக வலை தளங்களில் வர்ணித்து பேசி வருகின்றனர். இந்த டிரெய்லர் வெளியீட்டு நிகழ்விற்கு, தீபிகா ஒரு சிவப்பு ஹாட் லேடெக்ஸ் (ரப்பர்) ஆடையைத் அணிந்திருந்தார்.
இந்த ஆடை ஹால்டர் நெக் ஸ்டைலைக் கொண்டது. மென்மையான அலைகள் உடன் மின்னும்மேக்கப்பில் தனது குட்டையான கூந்தலுடன் தீபிகா படுகோன் ஒரு அழகு பதுமையாக காட்சியளித்தார். அவரது தோற்றம் யாரையோ நினைவூட்டியது என ரசிகர்கள் டிவிட்டரில் பேசி வந்தனர், மேலும் தீபிகாவின் இந்த சிவப்பு உடை தோற்றத்தை அமெரிக்க டிவி நடிகை கோர்ட்னி கர்தாஷியன் உடையுடன் ரசிகர்கள் ஒப்பிட்டு வருகின்றனர். கர்தாஷியன், தனது நிச்சயதார்த்தத்தின் போது இந்த ஆடையை அணிந்திருந்தார்.
2 நிமிடத்தில் 15 முத்தம்! தீபிகா படுகோனே நடிப்பில் பரபரப்பை கிளப்பிய புதிய படத்தின் வீடியோ SONG!
தர்மா புரொடக்ஷன்ஸ் மற்றும் Viacom18 ஸ்டுடியோஸ் இணைந்து ஷகுன் பத்ராவின் ஜௌஸ்கா ஃபிலிம்ஸுடன் இணைந்து தயாரித்துள்ள இந்த கெஹ்ரையன் படம், சிக்கலான நவீன உறவுகளின் அடிப்படையில், வயது வந்தோருக்கான சினிமா என தர்மா புரொடக்ஷன் மற்றும் தீபிகா படுகோன் ஆகியோர் தங்களது அதிகாரப்பூர்வமான ட்விட்டர், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்து விட்டு படத்தின் சில BTS புகைப்படங்களையும், இந்த திரைப்படத்திற்கான சிறிய டீசரை சில நாட்களுக்கு முன் பகிர்ந்தனர்.
ஜெய்பீம் பட VIDEO: ஆஸ்கார் விருது கமிட்டிக்கு பணம் கொடுக்கப்பட்டதா? உண்மை என்ன? முழு தகவல்
கெஹ்ரையன், ஷகுன் பத்ரா இயக்கத்தில், கரண் ஜோஹரின் தயாரிப்பில், 25 ஜனவரி 2022 முதல் அமேசான் பிரைமில் ஸ்ட்ரீமிங் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. சில நாட்களுக்கு முன் படத்தின் ரிலீஸ் பிப்ரவரிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதியாக பிப்ரவரி 11 ஆம் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.