தல அஜித்தின் 50 வது படமாக 2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 ஆம் தேதி ரம்ஜானை முன்னிட்டு, வெங்கட் பிரபு இயக்கத்தில் , யுவன் சங்கர் ராஜா இசையில், தல அஜித், அர்ஜுன், த்ரிஷா, ராய் லட்சுமி, பிரேம் ஜி, அஞ்சலி, ஆண்ட்ரியா நடிப்பில் வெளியான படம் ’மங்காத்தா’.
கிளவுட் நைன் மூவிஸ் சார்பில் தயாநிதி அழகிரி தயாரித்து, சன் பிக்சர்ஸ் நிறுவனமும், ராதிகா சரத்குமாரின் ரேடான் நிறுவனமும் இணைந்து இப்படத்தை வெளியிட்டது.
இந்த படத்தில் தல அஜித் வில்லனாக நடித்து ரசிகர்களையும், விமர்சகர்களையும் பாராட்ட வைத்திருந்தார். தமிழ் சினிமாவில் இந்த படம் டிரெண்ட் செட்டர் ஆனது. வசூலிலும் மிகப்பெரிய சாதனை படைத்தது. இந்த படம் வெளிவந்து நாளை ஆகஸ்ட் 31ல் 10 வருடங்கள் ஆகிறது. இதனை முன்னிட்டு இயக்குனர் வெங்கட்பிரபு தனது டிவிட்டர் பக்கத்தில் மங்காத்தா படத்தின் 10 வருட கொண்டாட்டத்திற்காக பிரத்யேக டிரெய்லர் மாஸ் அப்பை வெளியிட்டுள்ளார்.