கடந்த சுதந்திர தினத்தன்று காலை 10.30 மணிக்கு நடிகை நயன்தாரா பங்கு பெற்ற நேர்காணல் நிகழ்ச்சி ஒளிபரப்பானது.

லேடி சூப்பர் ஸ்டார் என்கிற பெயரில் கோலகலமாக நடந்த இந்த நிகழ்ச்சியில் நயன்தாராவை விஜய் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி டிடி என்கிற திவ்ய தர்ஷினி பேட்டி எடுத்தார்.
அந்த பேட்டியில் தனக்கும் விக்னேஷ் சிவனுக்குமான நிச்சயதார்த்தம், அதை குறிப்பிட்டு கையில் அணிந்திருக்கும் நிச்சயதார்த்த மோதிரம், விக்னேஷ் சிவனிடம் தனக்கு பிடித்த விஷயங்கள் என மனம் திறந்து பல்வேறு விஷயங்களை முதல் முறையாக நயன்தாரா ரிவீல் செய்தார்.
இந்நிலையில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுடனான நேர்காணல் வெற்றிகரமாக ஹிட் ஆனதை அடுத்து, தொகுப்பாளினி டிடி என்கிற திவ்ய தர்ஷினி டான்ஸ் ஆடும் வீடியோ வைரல் ஆகி வருகிறது.
நடிகை நயன்தாரா பார்வை மாற்றுத்திறனாளியாக நடித்திருக்கும் ‘நெற்றிகண்’ திரைப்படம், ஆகஸ்டு 13-ஆம் தேதி டிஸ்னி+ஹாட் ஸ்டாரில் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.