VIDEO: "விஜய்ணா நீங்க தான் சொல்லணும்!".. "ANIRUDH நெல்சன உள்ளயே விடாதீங்க!".. DDயின் க்யூட் REQUESTS!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

Behindwoods Gold Icons விழாவில் கலந்துகொண்ட 90ஸ் கிட்ஸின் விருப்பமான ஆங்கரான விஜய் டிவி தொகுப்பாளினி டிடி என்கிற திவ்யதர்ஷினி நிகழ்வின் முன் அளித்த Byte-ல் விஜே நிக்கியுடன் ஜாலியாக பேசி குட்டி டாஸ்குகளை க்யூட்டாக செய்துள்ளார்.

அதில் விஜே நிக்கி சில பொருட்களை தந்து யாருக்கெல்லாம் டெடிகேட் பண்ணுவீர்கள் என கேட்டுள்ளார். அப்படி லிப்ஸ்டிக்கை த்ரிஷாவுக்கும், கைவளைக் காப்பை தல அஜித்துக்கும் டிடி டெடிகேட் செய்கிறார். குறிப்பாக என்னை அறிந்தால் படத்தில் ஒயிட் ஷர்ட்டுடன் கையில் காப்புடன் தல அஜித் கெத்தாக வருவதை பார்த்ததால், காப்பு அவருக்கு தான் கரெக்டாக இருக்கும் என விளக்கம் அளிக்கிறார்.

இதேபோல் பிஹைண்ட்வுட்ஸ்க்கு ஒரு அழகான ஸ்மைலியையும், ஜெயிலில் இருக்கும் நண்பர் ஒருவரை மீட்பதற்கான பூட்டு சாவியினை, அனைவரையும் ஜோக் சொல்லி பாதிக்கவைக்கும் தங்கதுரைக்கு அந்த நிலை நேரலாம் எனவே அவரை மீட்க பயன்படுத்திக் கொள்வதாகவும் டிடி Fun-ஆக கலாய்க்கிறார்.

குறிப்பாக, “தளபதி 65 படத்தை விஜயை வைத்து இயக்கும் என் நண்பர் நெல்சன் திலீப்குமார், தம்மை விஜய் அண்ணாவை குடும்பத்துடன் சந்திக்க அவ்வப்போது கேட்டால், அழைத்துச் செல்ல மாட்டேன் என்கிறார். எனவே, விஜய்ணா நீங்க ஒரு வார்த்தை சொன்னீங்கணா.. அவர் அழைச்சுட்டு வருவார்ணா. ப்ளீஸ்!” என விஜய்க்கு டிடி ஒரு கோரிக்கை வைக்கிறார்.

இதேபோல் அனிருத் இவ்வளவு பொறுமையாக இருப்பதே பெரிய விஷயம், நெல்சனை அனிருத் நீங்க உள்ளயே விடாதீங்க என க்யூட்டாக ரிக்வஸ்ட் பண்ணுகிறார். டிடியின் டிடிக்கே உரித்தான இந்த குறும்பு கொப்பளிக்கும் பேச்சுகள் அடங்கிய இந்த முழுமையான வீடியோவை இணைப்பில் காணலாம்.

VIDEO: "விஜய்ணா நீங்க தான் சொல்லணும்!".. "ANIRUDH நெல்சன உள்ளயே விடாதீங்க!".. DDயின் க்யூட் REQUESTS! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

DD cute request to Thalapathy and Anirudh Behindwoods Awards

People looking for online information on Anirudh, Anirudh Ravichander, BehindwoodsGoldIcons, Dhivya Dharshini, Thalapathy65, ThalapathyVijay, Vijay will find this news story useful.