விஜய் டிவி நிகழ்ச்சிகளில் விஜேவாக, நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ஏகோபித்த ரசிகர்களை பெற்றவர் டிடி.

திவ்ய தர்ஷினி என்கிற டிடி, ஒரு விஜேவாக மட்டுமல்லாமல், பல ரசிகர்களுக்கும் இன்ஸ்பிரேஷனாக திகழ்பவர். ஆர்.ஜேவாக இருந்து, பின்னர் விஜேவாகவும் மாடலாகவும் திகழ்ந்த டிடி, சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். எனினும் காஃபி வித் டிடி போன்ற நிகழ்ச்சிகள் மூலம் டிடி இன்னும் அதிக ரசிகர்களை கவர்ந்தார்.
அண்மையில் விஜய் டிவியில் ஆர்.ஆர்.ஆர் படம் தொடர்பான பேட்டி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த பேட்டியில் ஆர்.ஆர்.ஆர் பட இயக்குநர் ராஜமௌலி மற்றும் நடிகர்கள் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோரிடம் பல்வேறு தகவல்கள் குறித்து டிடி உரையாடினார்.
இந்நிலையில் டிடி, வீல் சேரில் அழைத்துவரப்படும் ஒரு வீடியோ பரவி, ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி வந்தது. இதை பார்த்த பலரும் எதனால், டிடி வீல் சேரில் வருகிறார்.? டிடிக்கு என்ன ஆச்சு? என தொடர்ச்சியாக கேட்டுவந்தனர். இதற்கு காரணம், டிடிக்கு திடீரென rheumatoid (முடக்குவாத பிரச்சனை) ஏற்பட்டுவிட்டதாக கூறியுள்ளார்.
மேலும் இந்த rheumatoid பிரச்சனையால், தன்னால் நடக்கமுடியவில்லை என்றும், ஆனால் இதெல்லாம் தனக்குள் இருக்கும் குழந்தையை தடுக்க முடியாது என்றும் டிடி கூறியிருக்கிறார். இதை பார்த்த பலரும் அதிர்ச்சியானதுடன், டிடிக்கு ஆறுதல் மொழியை கூறி வருவதுடன், மிக விரைவில் சரியாகிவிடும் என நம்பிக்கை வார்த்தைகளையும் கூறி வருகின்றனர்.