BIGGBOSS வீட்டுக்கு போறதுக்கு முதல் நாள் இரவு சினேகன் செய்த காரியம்.. அவரே சொன்ன தகவல்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அவ்னி சினி மேக்ஸ் சார்பில் குஷ்பு மற்றும் பென்ஸ் மீடியா சார்பில் ஏசிஎஸ் அருண்குமார் இணைந்து தயாரித்துள்ள படம் 'காபி வித் காதல். இயக்குனர் சுந்தர்.சி தனது வழக்கமான கலகலப்பான பாணியில் இயக்கியுள்ள இந்த படத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் கதாநாயகர்களாக நடிக்க மாளவிகா சர்மா, ரைசா வில்சன், அம்ரிதா ஐயர், ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.

Advertising
>
Advertising

Also Read | Coffee With Kadhal : “என் பாட்டு இருக்கு.. ஆனா என்னையே ஆட கூப்டல..” - செல்லமாக கோவப்பட்ட குஷ்பு.!

மேலும் யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, பிரதாப் போத்தன், திவ்யதர்ஷினி (டிடி), விச்சு விஸ்வநாத் சம்யுக்தா ஷண்முகம், அருணா பால்ராஜ், பேபி விர்த்தி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். தமிழகமெங்கும் இந்தப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட இருக்கிறது.. வரும் அக்-7ஆம் தேதி இந்தப்படம் வெளியாக உள்ள நிலையில் இந்தப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் லீலா பேலஸ் ஹோட்டலில் நடைபெற்றது.

இவ்விழாவில், இந்த படத்தில் ஒரு பாடல் எழுதியுள்ள கவிஞர் சினேகன் பேசும்போது, “இதுவரை கிட்டத்தட்ட 3000 பாடல்கள் வரை எழுதி உள்ளேன். ஆனால் ஒரு சில இயக்குனர்களின் படங்களில் பணியாற்றவில்லையே என்கிற ஏக்கம் இருந்து வந்தது. அதில் சுந்தர்.சியும் ஒருவர். அந்த வகையில் இந்தப் படத்தில் ஒரு பாடல் எனக்கு எழுத வாய்ப்பு தேடி வந்தது,. ஆனால் அந்த சமயத்தில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மறுநாள் காலை நான் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல வேண்டிய இக்கட்டான சூழலில் தான் முதல்நாள் இரவு யுவன் சங்கர் ராஜா நாளை ஒரு பாடல் நீங்கள் எழுதவேண்டும் நேரில் சந்திப்போம் என்றார்..

அவரிடம் நிலைமையை சொல்லி இந்த படத்தில் நான் எப்படியும் பாட்டு எழுத வேண்டும் என்று கூறி, இரவு பதினொரு மணிக்கு ஆரம்பித்து ஒரு மணிக்குள் அந்த பாடலை எழுதிக்கொடுத்துவிட்டு தான், மறுநாள் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு போனேன். இயக்குனருடன் இல்லாமலேயே நான் முதன்முதலில் எழுதிய பாடல் இதுவாகத்தான் இருக்கும்” என்றார்.

Also Read | Coffee With Kadhal படக்குழுவினர் 200 பேரின் குடும்பத்துக்கும்.. தயாரிப்பாளர் அதிரடி அறிவிப்பு.!

தொடர்புடைய இணைப்புகள்

Day before Snehan going to bigg boss Coffee With Kadhal

People looking for online information on Coffee with kadhal, Sundar C will find this news story useful.