எவ்ளோ ஆர்வம் இருந்தா இவ்ளோ வீடியோ போடுவார்! டிக்டாக்கை அதிர வைத்த வார்னரின் லேட்டஸ்ட் இது!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் ஆன் ஃபீல்டில் மட்டும் இல்ல, ஆஃப் ஃபீல்டிலும் திறமையானவர் என்பதை தனது இன்ஸ்டாகிராமில் பல முறை நிரூபித்து வருகிறார், இன்ஸ்டாவில் வார்னர் தனது குடும்பத்தினருடன் பல டிக்டாக் வீடியோக்களை பதிவிடுகிறார்.

David warner new tiktok on dhanush kolaveri song goes viral
Advertising
Advertising

பல பிளாக்பஸ்டர் தெலுங்கு பாடல்களுக்கு ஆடி தனது ரசிகர்களை மகிழ்வித்த வந்த வார்னர் இப்போது இரண்டாம் முறையாக தனது ரசிகர்களுக்காக ஒரு அருமையான தமிழ் பாடலைத் தேர்ந்தெடுத்துள்ளார். முதல் முறை இஞ்சி இடுப்பழகி பாடலை மெட்டு கட்டி ஆடினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

சமீபத்தில் டேவிட் வார்னர் தனுஷின் புகழ்ப்பெற்ற வொய் திஸ் கொலவெறி டி பாடலை பின்னணியில் ஒலிக்கச் செய்து ஒரு காமெடி டிக்டாக் வீடியோவை உருவாக்கியுள்ளார்.தனுஷின் இந்த பிளாக்பஸ்டர் பாடலை வார்னர் கையாண்ட விதம் முக்கியமானது. டபுள் ஆக்‌ஷன் அவதாரத்தை முதல்முறையாக முயற்சித்துள்ளார் வார்னர்.

வார்னரின் இந்த டான்ஸ் வீடியோக்கள் சோஷியல் மீடியாவில் அதிகம் வரவேற்கப்படுகிறது. குறிப்பாக இந்த லாக்டவுன் காலகட்டத்தில் ரசிர்கர்களை மகிழ்வித்து வருகிறார் என்று அவரை நெட்டிசன்கள் பலரும் பாராட்டுகின்றனர். இந்த இடது கை ஆட்டக்காரர் அடுத்ததாக எந்த பாட்டுக்கு குத்தாட்டம் போடப்போகிறார் என்று காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்

 

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

David warner new tiktok on dhanush kolaveri song goes viral

People looking for online information on 3, David Warner, Dhanush, Kolavari, Tiktok will find this news story useful.