பிரபல OTT-க்காக ஷாருக்கான் தயாரிப்பில் ஆலியாபட் நடிக்கும் புதிய படம்.. வெளியான கலக்கல் டீசர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

RRR, கங்குபாய் கதியாவாடி படத்திற்கு பின் ஆலியா பட், ஷாருக்கான் தயாரிக்கும் புதிய படத்தில் நடித்துள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | வேறலெவல் லுக்கில் ரிது வர்மா.. வித்தியாசமான காஸ்டியூமில் நடத்திய போட்டோஷூட்.. வைரல் PHOTOS

பாலிவுட்டின் மிகப்பெரிய நடிகை ஆலியா பட். இவர் பாலிவுட்டின் முக்கியமான இயக்குநரும் தயாரிப்பாளருமான மகேஷ் பட் மற்றும் பிரிட்டிஷ் நடிகை சோனி ரஸ்தான் இவர்களின் மகள் ஆவார்.

குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்துள்ள இவர் 2012ஆம் ஆண்டு கரண் ஜோகர் இயக்கத்தில் வெளியான ஸ்டுடென்ட் ஆஃப் தி இயர் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் ஆனார். தொடர்ந்து இவர் நடித்த Two States, Highway, Udta Punjab, Raazu, Gully boy போன்ற பல படங்கள் இவரை பாலிவுட்டின் முக்கிய இடத்தில் சேர்த்தது. சமீபத்தில் இவர் நடித்த  Gangubhai khaidwadi படமும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

குறிப்பாக இம்தியாஸ் அலியின் ஹைவே படம், ஏ. ஆர். ரகுமானின் இசையில் பெரிய வரவேற்பை பெற்றது. ஆலியாவை நடிகையாக மட்டுமல்லாமல் சிறந்த பாடகியாகவும் உலகம் அறிய செய்தது. கடைசியாக RRR படத்தில் சீதாவாக நடித்தார். ஆலியா பட் தற்போது ரன்பீர் கபூர், அமிதாப் பச்சன்  ஆகியோருடன் பிரம்மாஸ்திரா முதல் பாகம், ரன்வீர் சிங்குடன் ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி படத்திலும் ஆலியா நடித்து வருகிறார்.

இந்த படங்களுக்கு முன்பே ஆலியா பட், ஷாருக்கான் தயாரிப்பில் டார்லிங்ஸ் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. இந்த படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் தளத்தில் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் நாள் வெளியாக உள்ளது. இந்த படத்தில் ஷெபாலி ஷா, விஜய் வர்மா, ரோஷன் மேத்யூ முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

Also Read | பச்சை வேட்டி கட்டி நடிகை மாளவிகா மோகன் செல்ஃபி.. இணையத்தை கலக்கும் வைரல் போட்டோ!

பிரபல OTT-க்காக ஷாருக்கான் தயாரிப்பில் ஆலியாபட் நடிக்கும் புதிய படம்.. வெளியான கலக்கல் டீசர்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Darlings Official Teaser Alia Bhatt Shahrukh Khan Netflix India

People looking for online information on Alia Bhatt, Darlings Movie, Darlings Official Teaser, Shahrukh Khan will find this news story useful.