விருந்துல விஜய் 100 ரூ பிரியாணி போட்டாரா? பிரபல பீஸ்ட் நடிகரின் வைரலாகும் பதிவு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் பீஸ்ட்.

Dancer Actor Sathish about Beast Vijay Nelson Treat
Advertising
>
Advertising

Also Read | மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடிக்கும் பிசாசு-2.. நான்கு மொழிகளில் டீசர்..! எப்போ ரிலீஸ்?

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க, பிற ரோல்களில் செல்வராகவன், விடிவி கணேஷ், யோகிபாபு, அபர்ணா தாஸ், ரெடின் கிங்ஸ்லி என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

Dancer Actor Sathish about Beast Vijay Nelson Treat

ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார், எடிட்டர் நிர்மல்குமார் எடிட்டிங்கை கையாண்டார். கிரண் கலை இயக்குனராக பணிபுரிந்துள்ளார். பீஸ்ட் படம் ரசிகர்களிடம் கனிசமான வரவேற்பையும், கலவையான விமர்சனங்களையும் பெற்று ஓடி வருகிறது.

பீஸ்ட் படத்தை தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினின் ஜெயண்ட்ஸ் நிறுவனம் வாங்கி வெளியிட்டுள்ளது. பீஸ்ட் திரைப்படம் விஜய் படங்களில் குறிப்பாக தமிழகத்தில் அதிக எண்ணிக்கையிலான திரைகளில் வெளியாகியது.

இந்நிலையில் பீஸ்ட் படக்குழுவுக்கு விஜய் விருந்து வைத்துள்ளார். இது குறித்த போட்டோவை வெளியிட்டு இயக்குனர் நெல்சன் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதே போல் நடிகரும், நடன இயக்குனருமான சதீஷ் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில், "நன்றி விஜய் sir & பீஸ்ட் குழுவினருடன் அருமையான நேரம்.  அப்பறம் 100 ரூபாய் பிரியாணி இல்லை, அது நெல்ஸுக்கு மட்டுமே என்று நினைக்கிறேன், அடுத்த ஒரு மாசத்துக்கும் சேர்த்து சாப்பிட்டேன். இப்படி ஒரு போஸ்ஸை தவிர்த்திருக்கலாம். ரொம்ப லேட் ஆனா அது ஒகே சாட்ஸ். ஆனால் தளபதி போஸ் ஸ்வாக் லெவல் மிக அதிகம். விரைவில் இந்த போஸ் காப்பியடிக்கப்படும். மேலும் மனோஜ் சார், கிரண் சகோதரர் மறக்கமாட்டேன், படத்தில் என் இடத்தை திருடியதற்காக. எனக்கு #BE(A)ST நினைவுகளைக் கொடுத்ததற்காக இந்தப் படத்தில் உள்ள அனைவருக்கும் நன்றி" என குறிப்பிட்டுள்ளார்.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

விருந்துல விஜய் 100 ரூ பிரியாணி போட்டாரா? பிரபல பீஸ்ட் நடிகரின் வைரலாகும் பதிவு! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Dancer Actor Sathish about Beast Vijay Nelson Treat

People looking for online information on Anirudh Ravichander, Beast, Dancer Sathish, Nelson Dilipkumar, Pooja Hegde, Redin Kingsley, Sun pictures, Vijay, Vijay Nelson Treat will find this news story useful.