நடன நடிகர் சிவசங்கரின் உடல்நிலை கவலைக்கிடம்! சிகிச்சைக்கு பணம் கட்ட தவிக்கும் குடும்பம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

திரைப்படத் துறையில் நீண்ட வருடங்களாக நடன மாஸ்டராக வலம் வருபவர் மாஸ்டர் சிவசங்கர்.

Advertising
>
Advertising

திரை உலகிற்கு டான்ஸ் மாஸ்டராக பரிட்சயமான மாஸ்டர் சிவசங்கர் முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் படங்களில் நடன இயக்குனராக பணிபுரிந்து இருக்கிறார். பல நடிகைகளுக்கும் நடன பயிற்சிகளை அளித்து புகழ் பெற்ற சிவசங்கர் மாஸ்டர், பின்னாட்களில் திரைப் படங்களிலும் நடிக்க தொடங்கினார்.

அதன்படி சந்தானம் நடித்த, ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதேபோல் சந்தானத்தின் ‘தில்லுக்கு துட்டு’ உள்ளிட்ட திரைப்படங்களிலும் சிவசங்கர் மாஸ்டர் தோன்றினார்.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்த ‘தானா சேர்ந்த கூட்டம்’ திரைப்படத்திலும், சூர்யாவுடன் படம் நெடுக வரும் முக்கிய கதாபாத்திரத்தில் சிவசங்கர் மாஸ்டர் நடித்திருந்ததை யாரும் மறக்க முடியாது.

இந்நிலையில் சிவசங்கர் மாஸ்டருக்கு கொரோனா ஏற்பட்டதாக தகவல்கள் தெரிய வந்திருக்கின்றன. அத்துடன் அவருடைய உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும், அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும், ஆனால் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுவதற்கு அதிகம் செலவாகும் என்றும் தெரியவந்துள்ளது. இதனால் அவருடைய குடும்பத்தினரிடத்தில், அவருடைய சிகிச்சைக்கான செலவுகளை சமாளிக்க முடியாத அளவில் பணத்தட்டுப்பாடு இருப்பதாகவும் தெரிகிறது.

சிவசங்கர் மாஸ்டருக்கு விஜய் மற்றும் அஜய் என்கிற மகன்கள் இருக்கும் நிலையில், அவரது மகன் அஜய் கிருஷ்ணாவின் தொடர்பு எண்ணுடன் சேர்த்து, பிரபல மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் தமது ட்விட்டர் பக்கத்தில் இந்த தகவலை பகிர்ந்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Dance master Sivasankar health cricical condition hospital

People looking for online information on Ajai Sivashankar, Dance choreography, Dance choreography Sivasankar, Dance Master, Nikil Murugan, Nikkil, Nikkil Murugan, Shiva Shankar master, Shiva Shankar master Dance choreography, Siva Shankar, Siva Shankar Dance choreography, Siva Shankar master, Siva Shankar master Dance choreography, Sivasankar dance master, Sivasankar master will find this news story useful.