பிக்பாஸ் போட்டியின் லேட்டஸ்ட் ப்ரொமோ குறித்து தமிழ் சினிமா பிரபலம் செம கமன்ட் அடுத்துள்ளார்.

விஜய் டிவியில் அக்டோபர் 4 முதல் பிக்பாஸ் சீசன்-4 போட்டி தொடங்கியிருக்கிறது. ரசிகர்களின் வரவேற்புடன் முதல்நாள் போட்டியாளர்களை அறிமுகம் செய்து வைத்தார் நடிகர் கமல். இந்த பிக்பாஸ் போட்டியில் ரியோ ராஜ், பாலாஜி முருகதாஸ், ஆஜித், ஜித்தன் ரமேஷ், ஆரி, அனு மோகன், அனிதா சம்பத், அறந்தாங்கி நிஷா, சுரேஷ் சக்ரவர்த்தி, ஷிவானி, கேப்ரியல்லா, சனம் ஷெட்டி, ரேகா, ரம்யா பாண்டியன், சோம், சம்யுக்தா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில் தற்போது பிக்பாஸ் போட்டியின் புதிய புரொமோ வெளியானது. இதில் செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத்துக்கும் சுரேஷ் சக்ரவர்த்திக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த புரொமோவை பார்த்த நடன இயக்குநர் சதீஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், ''நாடி, நரம்பு, இரத்தம், சதையில 3 சீசன் பிக்பாஸ் பார்த்து, ஊறிப்போனவங்கதான் இப்படி பேச முடியும்'' என கமன்ட் அடித்துள்ளார். சதீஷின் இந்த பதிவு ரசிகர்களை கவர்ந்துள்ளது.