திரையுலகில் சிறந்த விளங்குபவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு தாதா சாகேப் பால்கே விருது வழங்கி வருகிறது. இந்திய சினிமாவின் தந்தை என்று கருதப்படும் தாதா சாகேப் பால்கேவின் பெயரால் இந்த விருது வழங்கப்படுகிறது.
தமிழ் திரையுலகில் 1982 ஆம் ஆண்டு எல்.வி.பிரசாத் , 1996 ஆம் ஆண்டு நடிகர் திலகம் சிவாஜி கணேசன், கடந்த 2010 ஆம் ஆண்டு இயக்குநர் சிகரம் பாலச்சந்தர் உள்ளிட்டோருக்கு இந்த விருது அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு இந்த ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதினை மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவ்டேகர் அறிவித்துள்ளார்.
இதனையடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், 'வாழ்த்துக்கள் அமிதாப் பச்சன் ஜி. இந்த கௌரவத்திற்கு நீங்கள் தகுதியானவர்' என்று குறிப்பிட்டுள்ளார்.