திரைப்படமாகும் தாதா சவுரவ் கங்குலியின் வாழ்க்கை! வைரலாகும் அறிவிப்பு! முழு தகவல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சச்சின், தோனி, அசாருதீன் ஆகியோரின் வாழ்க்கை வரலாறு திரைப்படமானதை தொடர்ந்து தற்போது இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தற்போதைய தலைவருமான சவுரவ் கங்குலி அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக இருக்கிறது.

இதனை சவுரவ் கங்குலி தனது டிவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். லவ் பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இந்நிறுவனத்தின் அங்குர் கார்க், ரஞ்சன் இந்தப்படத்தை தயாரிக்கின்றனர். படத்தின் மற்ற படக்குழு விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும். இந்தி மொழியை மையமாக வைத்து பான் இந்தியன் திரைப்படமாக இது உருவாகிறது 

இவரது தலைமையில் இந்திய அணி பல வெற்றிக் கோப்பைகளை கைப்பற்றியுள்ளது. அதில் 2000 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி கோப்பையும் அடக்கம். இவரது தலைமையின் கீழ்தான் இந்திய அணி 2003 ஆம் ஆண்டு உலகக் கோப்பையின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

கங்குலி ஏற்கனவே  'A Century Is Not Enough' எனும் சுயவாழ்க்கை வரலாறு நூலை எழுதியுள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Dada sourav ganguly biopic movie announcement update

People looking for online information on Sourav Ganguly will find this news story useful.