நடிகர் ரஜினிகாந்த்தை அவருடைய ஸ்டைலான நடிப்புக்காக ரசிக்காதவர்களே இருக்க முடியாது. சூப்பர் ஸ்டார் என்கிற பட்டமும் கூட அப்படித் தான். அவருக்கே உரித்தான ஒன்றாக இருந்து வருகிறது.
50 ஆண்டுகளுக்கும் மேலாக ரஜினியின் நடிப்பை இந்திய திரையுலகம் பார்த்துவருகிறது. இந்நிலையில் அந்த 50 ஆண்டுகால திரை சேவையை பாராட்டி ரஜினிக்கு இந்திய அரசின் உயரிய விருது வழங்கப்படுவதாக மத்திய அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ஆம், நடிகர் ரஜினிகாந்திற்கு 51-வது தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுவதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடையே பேசிய பிரகாஷ் ஜவகேடர், இந்திய சினிமாவில் சிறந்த பங்களிப்பை அளித்ததற்காக ரஜினிகாந்திற்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பவதாக தெரிவித்துள்ளார்.
தாதா சாகேப் பால்கே விருது என்பது இந்திய சினிமாத்துறையில் மத்திய அரசால் வழங்கப்படும் மிக உயரிய விருதாக கருதப்படும் முக்கியமான விருது. இதற்கு முன்பாக நடிகர் திலகம் சிவாஜி கணேசன், இயக்குநர் கே.பாலசந்தர் உள்ளிட்டோருக்கும், இந்திய அளவில் அமிதாப் பச்சன், லதா மங்கேஷ்கர், கன்னட நடிகர் ராஜ்குமார், மலையாள இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோருக்கும் இந்த தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் நடிகர் கமல்ஹாசன் தமது ட்விட்டர் பக்கத்தில், “உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது உச்ச நட்சத்திரமும் என் மனதிற்கு இனிய நண்பருமான ரஜினிகாந்திற்கு அறிவிக்கப்பட்டிருப்பது பெரும் மகிழ்வளிக்கிறது. திரையில் தோன்றுவதன் மூலமே ரசிகர்களை வென்றெடுத்துவிட முடியும் என்பதை நிரூபித்த ரஜினிக்கு இந்த விருது 100% பொருத்தம்.” என்று பதிவிட்டுள்ளார்.
அத்துடன் பிரதமர் மோடியை, “பல தலைமுறைகளாக பிரபலமாக இருக்கும், சிலரின் பணிகள் பெருமை கொள்ளத்தக்கவை. மாறுபட்ட பாத்திரங்கள் மற்றும் அன்பான ஆளுமை ... அது ஸ்ரீ ரஜினிகாந்த் ஜி. உங்களுக்காக ஜி. தலைவாவுக்கு தாதாசாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அவருக்கு வாழ்த்துக்கள்.” என ரஜினியை வாழ்த்தியுள்ளார்.