நடிகர் தனுஷ் தற்போது கார்த்திக் நரேன் இயக்கும் 'மாறன்' படத்தின் படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளார். இந்த படம் தனுசின் 43வது திரைப்படமாகும்.

இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். சத்ய ஜோதி நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. சமீபத்தில் இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியானது.
இதன் பிறகு, தனுஷ் தனது 44 வது படமாக சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கான கதை, திரைக்கதை மற்றும் வசனங்களை தனுஷே எழுதியுள்ளார். இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார்.
இன்று (08.04.2021) காலை இந்த படத்தின் புதிய அப்டேட்டாக இயக்குனர் இமயம் பாரதிராஜாவும், நடிகர் பிரகாஷ் ராஜூம் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள் என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
அதனைத்தொடர்ந்து இந்த படத்தின் ஹீரோயின்கள் யாரென்பது குறித்து தயாரிப்பு நிறுவனம் தற்போது டிவிட்டரில் அறிவித்துள்ளது. அதன்படி தனுசுக்கு ஜோடியாக நித்யா மேனனும், ராஷி கண்ணாவும் நடிக்கின்றனர்.