இன்று பிறந்தநாள் கொண்டாடும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ், தனது 43 வது படத்தில் தற்போது நடித்துக்கொண்டு இருக்கிறார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தை மாபியா, துருவங்கள் 16 படங்களின் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்குகிறார். இந்த படத்திற்கு மலையாள திரைக்கதை ஆசிரியர்கள் சர்பு, சுகாஸ் பணிபுரிகின்றனர்.

தனுசுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். இவர்களுடன் முக்கிய வேடத்தில் நடிகர் மகேந்திரன், சமுத்திரக்கனி, ஸ்முருதி வெங்கட் ஆகியோர் நடிக்கிறார்கள். இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ்குமார் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.
தனுஷ் தனது 38வது பிறந்தநாளை (28.07.2021) இன்று கொண்டாடுகிறார். அதனை முன்னிட்டு இன்று காலை 11 மணிக்கு #D43 படத்தின் அப்டேட் வெளியாகும் என டிவிட்டரில் அறிவித்தது தயாரிப்பு நிறுவனம்.
அதன் படி இன்று 11 மணிக்கு வெளிவந்த அப்டேட்டில் தயாரிப்பு நிறுவனம் தனுசின் பிறந்தநாளை முன்னிட்டு D43 படத்தின் தலைப்பையும், முதல் லுக் போஸ்டரையும் பிறந்தநாளன்று (28.07.2021) வெளியிட்டுள்ளது.
படத்திற்கு 'மாறன்' என பெயரிட்டுள்ளனர். 'மாறன்' என்பது தமிழ் பாண்டிய மன்னர்களும், பாண்டிய நாட்டு மக்களும் சங்க காலம் முதல் விரும்பி வைத்துக்கொள்ளும் ஒரு பெயர் ஆகும். திரில்லர் வகைமையில் இந்த திரைப்படம் உருவாகிறது.
படத்தின் போஸ்டரில் தனுஷ், கையில் பேனாவை வைத்துக்கொண்டு, துப்பாக்கி வைத்திருப்பவனை அடிப்பது போன்ற படம் இடம் பெற்றுள்ளது. மேலும் கண்ணாடிகள் மூன்று துண்டுகளாக சிதறி மூன்று கண்ணாடிகளிலும் வெவ்வேறு தனுசின் படங்கள் இட்ம் பெற்றுள்ளன. மேலும் சதுரங்க ஆட்ட காய்கள் சிதறி பறப்பது போல உள்ளன. இதன் மூலம் மூளை விளையாட்டுக்களும், உளவியல் நுணுக்கங்கள் நிறைந்து இந்த திரைப்படம் உருவாகிறது என அறியப்படுகிறது.
இந்த படத்தில் தனுஷ் பத்திரிக்கையாளராக நடிப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதனை முன்னிட்டு #D43FirstLook #HappyBirthdayDhanush என ஹேஸ்டேக் மூலம் தனுஷ் ரசிகர்கள் டிவிட்டரில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.