விஸ்வாசத்துக்கு பிறகு இயக்குநர் சிவா - சூர்யா இணையும் படம் - யாருலாம் இருக்காங்க தெரியுமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தல அஜித் - நயன்தாரா இணைந்து நடித்து கடந்த பொங்கலை முன்னிட்டு வெளியான படம் 'விஸ்வாசம்'. சிவா இயக்கிய இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்றது.

இதனையடுத்து இயக்குநர் சிவா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணையவுள்ளதாகவும் சூர்யாவுடன் இணையவுள்ளதாகவும் அடுத்தடுத்து செய்திகள் வெளியான வண்ணம் இருந்தன.

இந்நிலையில் இயக்குநர் சிவா சூர்யாவுடன் இணையவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை ஸ்டுடியா கிரீன் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்த படத்தில் பணிபுரியும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றி தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி இந்த படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார்.  வெற்றி இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். திலிப் சுப்புராயன் சண்டை பயிற்சி இயக்குநராகவும், ஆண்டனி எல் ரூபன் படத்தொகுப்பாளராகவும் பணிபுரியுவுள்ளனர். மிலன் இந்த படத்தின் கலை இயக்குநராக பணிபுரியவுள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

D Imman is the Music Composer of Siva - Suriya's Film

People looking for online information on D Imman, Dhilip Subburayan, Siva, Studio green, Suriya will find this news story useful.