டி.இமானுடன் 7வது முறையாக இணையும் பிரபல இயக்குநர்! அவரே வெளியிட்ட மெகா அறிவிப்பு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் ஸ்போர்ட்ஸ் படங்களின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் சுசீந்திரன்.

D Imman Birthday Popular director joins 7th time official
Advertising
>
Advertising

இயக்குநர் சுசீந்திரன்

இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் சந்தோஷ் ரமேஷ், மணீஷா யாதவ் நடித்து உருவான திரைப்படம் ஆதலால் காதல் செய்வீர். இதேபோல் கார்த்தி நடிப்பில் நான் மகான் அல்ல திரைப்படத்தையும், விஷ்ணு விஷால் நடிப்பில் மாவீரன் கிட்டு திரைப்படத்தையும் இயக்குநர் சுசீந்திரன் இயக்கியுள்ளார். நடிகர் சிம்புவின் நடிப்பில் சுசீந்திரன் இயக்கிய ஈஸ்வரன் திரைப்படம் கடந்த வருடம் வெளியானது.

D Imman Birthday Popular director joins 7th time official

ஸ்போர்ட்ஸ் படங்கள்

குறிப்பாக இயக்குநர் சுசீந்திரன் ஸ்போர்ஸ் படங்களாக, சசிகுமார் - பாரதிராஜா நடிப்பில் கென்னடி கிளப், வெண்ணிலா கபடி குழு 2 பாகங்கள், ஜீவா உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். இதுவரை இயக்குநர் சுசீந்திரன், இசையமைப்பாளர் டி.இமானுடன் பாண்டிய நாடு, ஜீவா, பாயும் புலி, மாவீரன் கிட்டு, நெஞ்சில் துணிவிருந்தால், கென்னடி கிளப் ஆகிய 6 திரைப்படங்களில் இணைந்து பணிபுரிந்துள்ளார்.

இதனிடையே தேசிய விருது வென்ற இசையமைப்பாளர் டி.இமானின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. இதற்கு வாழ்த்து சொன்ன இயக்குநர் சுசீந்திரன், இசையமைப்பாளர் டி.இமானுடனான தமது 7வது படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இமானுடன் 7வது முறை..

இது தொடர்பான அந்த அறிவிப்பில், “வணக்கம். இமான் பிரதருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். மீண்டும் நான் டி.இமானின் இசையில் 7வது முறை இணைந்து ஒரு  திரைப்படங்களை இயக்கவுள்ளேன்.

ரொம்ப சந்தோசமா இருக்கு. இசையமைக்கும் பணிகள் நடந்துகொண்டிருக்கிறது. மே 1-ஆம் தேதி ஷூட்டிங் பிளான் பண்ணியிருக்கோம். எங்களுடைய நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தின் இதர குழு விபரம் விரைவில் அறிவிக்கப்படும். நன்றி.” என குறிப்பிட்டுள்ளார்.

Also Read: போடு சக்க! நம்ம மின்னல் முரளி சிபு.. நடிகர் குரு சோமசுந்தரம்.. இப்ப தெறிக்கவிடும் வில்லனா?.. செம தகவல்.!

தொடர்புடைய இணைப்புகள்

D Imman Birthday Popular director joins 7th time official

People looking for online information on D Imman, Nallusamy Pictures, Suseenthiran will find this news story useful.