அருள்நிதி நடிப்பில் வெளிவந்த புதிய த்ரில்லர் திரைப்படம்.. பிரபல OTT-யில் ரிலீஸா? எப்போ?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அருள்நிதி. இவர் நடிப்பில் உருவான வம்சம் மற்றும் மௌனகுரு ஆகிய திரைப்படங்கள் வெற்றி பெற்று அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தன.

Advertising
>
Advertising

Also Read | தனுஷ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்.. புது போஸ்டருடன் வெளியான 'வாத்தி' அப்டேட்!

அருள்நிதி நடிப்பில் உருவான D ப்ளாக் திரைப்படம் கடந்த ஜூலை 1 ஆம் தேதி இந்த படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. இந்த படத்தை சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் தமிழகத்தில் வெளியிட்டது. இந்த படத்தை அறிமுக இயக்குனர் விஜய்குமார் ராஜேந்திரன் இயக்கியுள்ளார். திரில்லர் படமாக டி ப்ளாக் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கனிசமான வரவேற்பை பெற்றது.  இந்த படத்தின் டிஜிட்டல் மற்றும் வெளிநாட்டு உரிமைகளை முன்னணி நிறுவனமான ’ap internationals’ நிறுவனம் கைப்பற்றியது. 

இந்நிலையில் இந்த படம் வரும் ஆகஸ்ட் 1 முதல் SImply South எனும் OTT தளத்தில் வெளியாக உள்ளது. இந்தியாவுக்கு வெளியே இந்த தளத்தில் இப்படத்தை கண்டுகளிக்கலாம்.

தற்போது, அருள்நிதி நடிப்பில் 'டைரி' படத்தின் முதல் லுக், மோஷன் போஸ்டர் மற்றும் டீசர் ஆகியவை வெளியாகி கவனத்தைப் பெற்றன.இந்த படத்தை இயக்குனர் அஜய் ஞானமுத்துவின் உதவி இயக்குனராக பணியாற்றிய இன்னாசி பாண்டியன் இயக்கியுள்ளார். இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஆகஸ்ட் 11 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அருள் நிதி நடிப்பில் தேஜாவு திரைப்படம் தற்போது திரையரங்கில் ஓடிக்கொண்டு வருகிறது. இப்படத்தினை அறிமுக இயக்குனரான அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கியுள்ளார். இப்படத்தில் மதுபாலா, அச்சுத் குமார், ஸ்முருதி வெங்கட், ராகவ் விஜய், சேத்தன், 'மைம்' கோபி மற்றும் காளி வெங்கட் போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர்.

Also Read | துல்கர் - மிருணாள் - ராஷ்மிகா நடிக்கும் 'சீதா ராமம்'.. கலர்ஃபுல் ரொமாண்டிக் டிரெய்லர்!

தொடர்புடைய இணைப்புகள்

D Block Movie OTT Release Date Announced Simply South

People looking for online information on Arulnidhi, அருள்நிதி, D Block movie, D Block Movie OTT Release will find this news story useful.