யூடியூப் தளங்களில் ஆபாசமாக பேசி வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் பப்ஜி மதன் சிக்கியுள்ளார்.
ஆன்லைனில் பப்ஜி உள்ளிட்ட பல லைவ் வீடியோ கேம்களில் எப்படி விளையாடி ஜெயிக்கலாம் என்கிற டிப்ஸ்களை சொல்லித்தரும் ஒருவர்தான் பப்ஜி மதன். தொடக்கத்தில் இவரது யூடியூபில் தம்முடைய ஆபாச பேச்சுகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து டாக்சிக் மதன் என்று பெயரை மாற்றிக்கொண்டு 18 வயது நிரம்பியவர்களுக்கான யூடியூப் சேனலை தொடங்கினார்.
இந்த யூடியூப் சேனலில் அவர் தன்னோடு ஆன்லைனில் விளையாடும் பெண்கள் உட்பட சக போட்டியாளர்களை தரக்குறைவான வார்த்தைகளில் இழிவாக திட்டுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். இப்படியான ஆபாச பேச்சுகள் குறித்து சைபர் கிரைமில் புகார் அளிக்கப்பட்டது.
ஆனால் அப்போதும், இதெல்லாம் இணைய உலகில் சகஜம். இப்படி இணையத்தில் பேசுவதால் எல்லாம் தன்னை யாராலும் எதுவும் செய்ய முடியாது என்றும், எந்தப் பிரச்னையாக இருந்தாலும் அவற்றை சமாளிக்க தன்னிடம் வழக்கறிஞரும், பணமும் இருப்பதாக கூறியிருப்பதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அவருடைய விபரங்களை சேகரித்த போலீசார் விசாரணைக்கு அவரை நேரில் ஆஜராகும்படி உத்தரவிட்டு இருந்தனர்.
இந்த நிலையில் புளியந்தோப்பு சைபர் பிரிவு போலீசாரின் உத்தரவுக்கு இணங்க அவர் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்ததாக தகவல்கள் வெளியானது. இதனை அடுத்து அவரை கைது செய்வதற்கான நடவடிக்கையை எடுத்து வரும் போலீசார் முதற்கட்டமாக மதனின் யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளை முடக்க, சம்மந்தப்பட்ட வலைதள நிறுவனத்திற்கு கடிதம் அனுப்பி இருக்கின்றனர்.
ALSO READ: அதிர்ச்சி மரணம்!! 'பிரெய்ன் டெட்' என அறிவிக்கப்பட்ட நடிகருக்கு விபத்தில் பெரும் சோகம்!