”சிரிக்க வைப்பதே கடமைனு… இப்ப அழ வச்சீட்டிங்க”… வடிவேல் பாலாஜிக்காக உருகிய CWC புகழ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மறைந்த நடிகர் வடிவேல் பாலாஜியை சக நடிகரான CWC புகழ் அவரது பிறந்தநாளில் நினைவு கூர்ந்துள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | “உங்களால காத்திருக்க முடியாதுல்ல...”… ‘RRR’ OTT ரிலீஸ் தேதியை மாற்றிய நெட்பிளிக்ஸ்!

வடிவேல் பாலாஜி மரணம்…

விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சிகளான  ‘கலக்கப் போவது யாரு’,  ‘அது இது எது’ உள்ளிட்ட நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமானவர் நகைச்சுவை கலைஞர் வடிவேல் பாலாஜி. இவர், கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் 10-ம் தேதி சென்னையில் உடல்நலக் குறைவு காரணமாக மரணமடைந்தார். இந்த செய்தி அவரது ரசிகர்கள் மற்றும் சக கலைஞர்களுக்கு பெரிய அதிர்ச்சியாக அமைந்தது. இதையடுத்து ரசிகர்கள் மற்றும் சக கலைஞர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தினர். அவர் பல காலம் பணியாற்றிய விஜய் டிவி அவருக்காக சிறப்பு நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது.

பிறந்தநாள் பதிவு..

அவர் இறந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையிலும் பலரும் அவ்வப்போது அவரைப் பற்றிய தங்கள் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டு வருகின்றனர். இந்நிலையில் தற்போது விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளில் வடிவேல் பாலாஜியோடு பங்கேற்ற நடிகர் புகழ் உருக்கமான ஒரு பதிவைப் பகிர்ந்துள்ளார். இன்று வடிவேல் பாலாஜியின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் பகிர்ந்துள்ள அந்த பதிவு இணையத்தில் கவனத்தைப் பெற்று வருகிறது.

உருகிய CWC புகழ்…

புகழின் பதிவில் “மண்ணில் இருந்து மறைந்தாலும் என் மனதில் இருந்து நீங்கள் மறையவில்லை மாமா. வாய்ப்பு தேடி வரும் அனைவருக்கும் வழிகாட்டியாக இருந்தீர்கள். உங்களுடன் இருந்த ஒவ்வொரு நாளும் என் வாழ்நாளில் மறக்க முடியாத நாட்கள். பலவற்றை எனக்கு கற்று கொடுத்தீர்கள். மற்றவர்களை எப்போதும் சிரிக்க வைப்பதே கடமை என வாழ்ந்த நீங்கள், இப்போது எங்களுடன் இல்லாமல் அழ வைத்து விட்டீர்கள். நினைவில் இருந்து என்றும் நீங்காது உங்கள் முகம். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மாமா மிஸ் யூ மாமா.” என உருக்கமாக வடிவேல் பாலாஜியின் இழப்பைப் பற்றி தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டும் இதே போல வடிவேல் பாலாஜி பிறந்தநாள் அன்று புகழ் ஒரு பதிவைப் பகிர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8

தொடர்புடைய இணைப்புகள்

CWC pugazh remembered vadivel balaji on his birthday

People looking for online information on CWC pugazh, CWC pugazh remember vadivel balaji, Vadivel Balaji will find this news story useful.