"உங்கள் நான்..".. SUPER SINGER-ல் BIGG BOSS கமல் போல் பேசிய COOK WITH COMALI மூக்குத்தி முருகன்.. ஆல் ரவுண்டர்ப்பா!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் முருகன் அவ்வப்போது சிறப்பு பர்பார்மன்ஸ்களை பண்ணி வருகிறார்.

Advertising
>
Advertising

பாடகர் முருகன் சூப்பர் சிங்கர்

முந்தைய சீசன் முதல் மூக்குத்தி முருகன் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் பாடகர் முருகன் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாடி அசத்தியதுடன் டைட்டில் வின்னராகவும் இடம்பெற்றிருந்தார். அவருடைய பாடல்களுக்கு ஏராளமான ரசிகர்கள் தமிழகத்தில் இருக்கின்றனர். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியிலும் அவருடைய பாடல்களை சக சூப்பர் சிங்கர் போட்டியாளர்கள் மற்றும் சூப்பர் சிங்கர் நடுவர்கள் புகழ்ந்து பேசுவது உண்டு.

Also Read: "100 தடவை விழுந்தேன்!.. விட்டுட்டு போய்டலானு நெனைச்சேன்!".. சமந்தா! skiing வீடியோ

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் போது அரங்கத்தில் மூக்குத்தி முருகன் மற்றும் மா.கா.பா ஆனந்த் ஆகியோரின் உரையாடல்கள் மிகவும் வயிறு குலுங்க சிரிக்கும் அளவுக்கு காமெடியாகவும் ஜாலியாகவும் இருக்கும். ஏற்கனவே இவர்களுடன் இணைந்து பிரியங்கா பண்ணிய அட்ராசிட்டிகளெல்லாம் காமெடிக்கு கியாரண்டியகவே இருக்கும்.

மூக்குத்தி முருகன், மாகாபா ஆனந்த், மற்றும் மைனா

ஆனால் பிரியங்கா தற்போது நடந்து முடிந்த விஜய் டிவி பிக்பாஸ் 5 வது சீசனில் முக்கியமான போட்டியாளராக இருந்தார். குறிப்பாக இந்த போட்டியில் ரன்னர் அப் பிரியங்கா வந்தார். இதனையடுத்து அவர் விரைவில் விஜய் டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே மா.கா.பா ஆனந்த் மற்றும் மைனா நந்தினி இருவரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில் மூக்குத்தி முருகன், மாகாபா ஆனந்த், மற்றும் மைனா மூவரும் பேசிய விஷயங்கள் கலகலப்பாகவும் காமெடியாகவும் வைரலாகி இருக்கின்றன.

இதில் மூக்குத்தி முருகன் நடிகர் கமல்ஹாசன் போல் நடந்து வந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் எப்படி பேசுவார் என்பதை பேசியுள்ளார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது.

Also Read: மியா காலிஃபாவின் வேறலெவல் சமையல்.. குக் வித் கோமாளிக்கு கூட்டிட்டு வாங்கப்பா! பரவும் வீடியோ

பிக்பாஸில் ஆங்கராக போகவிருக்கிறேன்

இந்த நிகழ்ச்சியின் முக்கிய கோமாளியாக மூக்குத்தி முருகன் பர்பார்ம் பண்ணி வருகிறார். இந்நிலையில் தற்போது சூப்பர் சிங்கரில் பிக்பாஸிற்கு போகிறீர்களா என்று முருகனை பார்த்து மாகாபா ஆனந்த் கேட்டதற்கு சான்ஸ் கிடைத்தால் போவேன் என்று முருகன் சொல்லியிருக்கிறார். அப்படியானால் என்ன ரோல் நீங்கள் பண்ண போகிறீர்கள்? என்று மா.கா.பா கேட்டதற்கு, நான் பிக்பாஸில் ஆங்கராக போகவிருக்கிறேன் என்று கூறி இருக்கிறார்.

உங்கள் நான்.. பட்டர் நான்

உடனே மா.கா.பா.ஆனந்த், “எங்க? அப்படி என்றால் ஆங்கர் போல் நடந்து வந்து பேசி காட்டுங்கள்!” என்று சொன்னதற்கு, மூக்கித்தி முருகனோ கமல்ஹாசன் போல நடந்து வந்து ஒவ்வொரு பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதியிலும் கமல்ஹாசன் சொல்லுவது போல், “உங்கள் நான்” என்று தடாலடியாக கூற, அனைவரும் அரங்கம் அதிர சிரித்துவிட்டனர்.

உடனே மா.கா.பா.ஆனந்த், “அதென்ன.. உங்கள் நான்.. பட்டர் நான்!” என்று கலாய்க்க தொடங்கி விட்டார். இப்படி, பாடுவது மட்டுமல்லாமல் காமெடியாகவும் பேசி மக்களை மகிழ்விக்கும் மூக்குத்தி முருகன் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனிலும் அனைவரையும் சிரித்து மகிழ வைத்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: "ஹேப்பி பர்த்டே.. ஸ்ருதி மேம்!".. கைகள் மாற்றுத்திறனாளி பெண்ணின் சர்ப்ரைஸ் ‘ஓவியம்’! நெகிழ வைக்கும் வீடியோ

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

CWC mookkuthi murugan imitates bigg boss Kamal super singer

People looking for online information on Bigg Boss kamal, Cook with comali 3, Cook With Comali Season 3, Mookkuthi murugan, Super Singer will find this news story useful.