காணாமல் போன BIKE… CCTV-ல் சிக்கிய திருடர்கள்- CWC மணிமேகலை வெளியிட்ட PIC!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

குக் வித் கோமாளி புகழ் மணிமேகலையின் கணவரின் பைக் சில தினங்களுக்கு முன்னர் காணாமல் போனதாக அறிவித்தார்.

Advertising
>
Advertising

Also Read | திடீர் கைது… அம்மாவிடம் கெஞ்சும் வெண்பா – என்ன ஆச்சு? பாரதி கண்ணம்மாவில் பரபரப்பு!

CWC மணிமேகலை….

தனியார் டிவி சேனலின் நிகழ்ச்சித் தொகுப்பாளராக  பல வருடங்களாக பணியாற்றி பிரபலம் ஆனவர் மணிமேகலை. இந்நிலையில் விஜய் டிவியில் கடந்த ஆண்டு நடந்த குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் அவரும் ஒரு போட்டியாளராகக் கலந்துகொண்டு கலக்கினார்.  நிகழ்ச்சியில் பங்கேற்று அதிரடியாக எண்டர்டெயின் செய்து வந்தார். அவரின் குறும்புகளும், நிகழ்ச்சியின் போது அவர் ஆடிய நடனமும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. கடந்த சீசனின் ஸ்டார் போட்டியாளர்களில் ஒருவரானார் மணிமேகலை.

பைக் திருட்டு…

சமீபத்தில் மணிமேகலை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஒரு தகவல் கவனத்தைப் பெற்றுள்ளது. அதில் தன்னுடைய கணவரின் விலையுயர்ந்த கே டி எம் பைக் காணாமல் போயுள்ளதாகக் கூறியிருந்தார். அதில் “அசோக் நகர் அருகே உள்ள எங்கள் நண்பர்கள் வீட்டுக்கு அருகே நிறுத்தப்பட்டிருந்த பைக் திருடு போயுள்ளது. கல்யாணத்துக்குப் பிறகு கஷ்டப்பட்டு சம்பாதிச்சு ஆசையா வாங்குனா ஃபர்ஸ்ட் பைக். மனசுக்கு கஷ்டமா இருக்கு. வருஷத்துக்கு ஒரு சம்பவம் எங்க இருந்துதான் வருதோ !” என சோகத்தோடு பதிவிட்டிருந்தார். மேலும் அந்த பதிவில் வண்டியைப் பற்றிய விவரங்களை வெளியிட்ட அவர் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், எல்லாமே நல்லபடியாக முடியும் என்று நம்புவதாகவும் கூறியுள்ளார். இது சம்மந்தமாக அவர்கள் போலீஸ் நிலையத்திலும் புகார் அளித்திருந்தார்.

CCTV-ல் சிக்கிய திருடர்கள்…

இந்நிலையில் தற்போது மணிமேகலை தன்னுடைய யுடியூப் சேனலில் பைக் திருட்டு சம்மந்தமாக சில ஆதாரங்களை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் சிசிடிவி யில்  பைக் திருடர்கள் பைக்கை எடுத்து செல்வது பற்றிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் இருந்து எடுத்து வெளியிட்டுள்ளார். அதில் இருவர் நடந்து வந்து அந்த பைக்கை எடுத்துக் கொண்டு செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அது சம்மந்தமான சில புகைப்படங்களையும் அவர் பகிர்ந்துள்ளார். மேலும் இதுவரை பைக் கிடைக்கவில்லை என்றும் விரைவில் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

Also Read | வாவ்… செம்ம… கார்கோ விமான செட்டில் ஆக்ஷன்… ஜெய்யின் ‘பிரேக்கிங் நியூஸ்’ BTS pics

தொடர்புடைய செய்திகள்

CWC manimegalai shared cctv pic of bike robbers

People looking for online information on குக் வித் கோமாளி, மணிமேகலை, Bike robbers, CCTV Pictures, CWC Manimegalai will find this news story useful.