ஹீரோவாகும் CWC 'புகழ்'.. சந்தானம் பட ஹீரோயின் கூட ரொமான்ஸ்.. அசத்தல் ஃபர்ஸ்ட் லுக்..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த 'கலக்கப் போவது யாரு', 'அது இது எது' உள்ளிட்ட நிகழ்ச்சிகளில், புகழ் தோன்றி இருந்தாலும், அதனை விட அவரை உச்சத்திற்கு கொண்டு சேர்த்த நிகழ்ச்சி என்றால் அது 'குக் வித் கோமாளி' தான்.

Advertising
>
Advertising

வரும் பெண் போட்டியாளர்களிடம் ரொமான்ஸ் என்ற பெயரில் எதையாவது செய்து, பல்ப் வாங்கிக் கொள்வது, நடக்குவர்களிடம் சண்டை இழுப்பது என புகழின் அட்டகாசங்களை ரசிப்பதற்கு என்றே பலரும் இந்த நிகழ்ச்சியை பார்த்து வருகின்றனர்.

இதனால், தமிழக மக்கள் மத்தியிலும் பிரபலம் ஆனார் புகழ். குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் கிடைத்த பிரபலத்தால், புகழுக்கு அடுத்தடுத்து திரைப்பட வாய்ப்புகளும் வந்தது.

'CWC' மூலம் கிடைத்த பிரபலம்

சந்தானம் நடித்த சபாபதி, அஜித் குமார் நடித்த வலிமை, சூர்யா நடிப்பில் வெளியாகி இருந்த எதற்கும் துணிந்தவன் உள்ளிட்ட திரைப்படங்களில், சிறு சிறு கதாபாத்திரங்களில் புகழ் தோன்றி இருந்தார். தொடர்ந்து, இன்னும் சில முக்கியமான திரைப்படங்களிலும் அவர் நடித்து வருகிறார். ஒரு பக்கம் பட வாய்ப்புகளால் பிசியாக இருந்தாலும், இன்னொரு பக்கம் தற்போது ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளியின் மூன்றாவது சீசனிலும், கோமாளியாக வந்து பலரையும் சிரிக்க வைத்து வருகிறார்.

நாயகனாகும் புகழ்

சிறு சிறு கதாபாத்திரங்களில் திரைப்படங்களில் தோன்றி வந்த புகழ், புதிய திரைப்படம் ஒன்றில் நாயகனாக நடிக்கவுள்ளார். "Mr Zoo Keeper" என பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தை ஜே சுரேஷ் என்பவர் இயக்கவுள்ளார். மேலும், இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். படத்தின் நாயகியாக ஷிரின் காஞ்ச்வாலா நடிக்கவுள்ளார். இவர் கடைசியாக, சந்தானம் நடித்து வெளியாகி இருந்த 'டிக்கிலோனா' படத்தின் நாயகிகளில் ஒருவராக நடித்திருந்தார்.

கொண்டாடிய CWC பிரபலங்கள்

இந்த படத்தின் போஸ்டர், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் போது வெளியிடப்பட்டது. அந்நிகழ்ச்சியில் சக கோமாளிகள், போட்டியாளர்கள் மற்றும் நடுவர்கள் என அனைவரும் புகழிற்கு பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்திருந்தனர். அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடவும் செய்திருந்தனர்.

ரசிகர்கள் வாழ்த்து

"Mr Zoo Keeper" படத்தின் படப்பிடிப்பும் இன்று ஆரம்பமாகியுள்ளதாக புகழ் தன்னுடைய சமூக வலைத்தளங்களில் குறிப்பிட்டுள்ளார். ரியாலிட்டி ஷோ ஒன்றில் இருந்து, தன்னுடைய திறமையின் மூலம் சினிமாவில் தோன்றி, இன்று நாயகனாகவும் மாறியுள்ள புகழுக்கு, ரசிகர்கள் பலரும் மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய இணைப்புகள்

Cwc debuts as hero in new movie first look released

People looking for online information on Cook with comali, Cook with comali 3, Cook With Comali Season 3, Mr Zoo Keeper, Pugazh will find this news story useful.