“8 வருஷம் குழந்தை இல்ல.. CWC பாத்து கர்ப்பம் ஆனாங்க…” CHEF வெங்கடேஷ் பட் உருக்கம்…

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றான குக் வித் கோமாளியின் முதல் இரண்டு சீசன்கள் வெற்றி பெற்றதை அடுத்து தற்போது மூன்றாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

Advertising
>
Advertising

குக் வித் கோமாளி…

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி பற்றி தெரியாதவர்களே இருக்க முடியாது. குக் வித் கோமாளி என்றாலே, அதன் பெயரிலேயே வரும் கோமாளிக்கு தான் அதிக ரசிகர்கள் உள்ளனர். சீசனுக்கு சீசன் போட்டியாளர்கள் மாறினாலும், அதை பற்றி பெரிதும் கவலை கொள்ளாத ரசிகர்கள், கோமாளிகள் என்ட்ரிக்கு தான் உற்சாகம் அடைகின்றனர். இதற்கு காரணம், சமையல் தெரிந்த போட்டியாளர்களுக்கு உதவியாக, எதுவுமே தெரியாமல் ஜோடி போடும் கோமாளிகள் செய்யும் அலப்பறைகள் தான்.

குக் வித் கோமாளி Stars…

இந்நிகழ்ச்சியின் போட்டியாளர்களுக்கும் சரி, கோமாளிகளுக்கும் சரி தனித்தனியே ரசிகர் பட்டாளம் இருக்கிறது என்றே சொல்லலாம். போட்டியாளர்கள் கோமாளிகளை வைத்துக் கொண்டு சமைக்க படாதபாடு படும் காட்சிகள் ரசிகர்களை குலுங்கி, குலுங்கி சிரிக்க வைக்கிறது. அதிலும் முக்கியமாக புகழ், பாலா, ஷிவாங்கி, மணிமேகலை என கடந்த சீசனில் இருந்த கோமாளிகள் இந்த சீசனிலும் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த ஷோவிற்காக ரசிகர்கள் காத்திருந்து பார்க்கும் அளவிற்கு மிகப்பெரிய ரீச் அடைந்துள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சியின் மூலமாக பிரபலம் ஆன அஸ்வின், சிவாங்கி மற்றும் புகழ் ஆகியோர் தற்போது சினிமாவில் அறிமுகமாகி வளரும் நட்சத்திரங்களாகியுள்ளன.

ரசிகையின் கதை…

இப்போது சீசன் 3 நடந்து வரும் நிலையில், இந்த வார நிகழ்ச்சியில் செஃப் வெங்கடேஷ் பட் பகிர்ந்துள்ள ஒரு தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. அது சம்மந்தமான ப்ரோமோவில் “இந்த நிகழ்ச்சிய பத்தி நெறய எனக்கு சோஷியல் மீடியாவுல நெறய மெஸேஜ் எல்லாம் வந்திருக்கு. அதுலயும் குறிப்பா சொல்லணும்னா ‘ஒருத்தங்க எனக்கு 8 வருஷமா கொழந்த இல்ல. இதுக்காக நான் ட்ரீட்மெண்ட்டுக்கு போயிருந்தேன். அப்போ அங்க வந்த ஒருத்தங்க எனக்கும் குழந்த இல்ல. குக் வித் கோமாளி பாத்ததும்தான் நான் கன்சீவ் ஆனேன். நீங்களும் பாருங்க’ என்று சொன்னாங்க. அவங்க சொன்னதுக்கப்புறம்தான் நான் இந்த ஷோ பாக்க ஆரம்பிச்சேன். இப்ப நானும் கர்ப்பமா இருக்கேன்னு சொன்னாங்க” என்ற தகவலை அவர் நிகழ்ச்சிப் போட்டியாளர்களோடு பகிர்ந்துள்ளார். இது சம்மந்தமான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

“8 வருஷம் குழந்தை இல்ல.. CWC பாத்து கர்ப்பம் ஆனாங்க…” CHEF வெங்கடேஷ் பட் உருக்கம்… வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

CWC Chef venkatesh emotion viral story of fan

People looking for online information on Chef venkatesh, Cook with comali, Vijay tv will find this news story useful.