"நமக்காக நாம மட்டும் தான் இருப்போம்!".. அஸ்வினின் அடுத்த சிங்கிள்!.. அவரே வெளியிட்ட போஸ்டர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இளசுகளின் இதயத் துடிப்பாகவே மாறி வருகிறார் குக் வித் கோமாளி மூலம் பிரபலம் அடைந்த நடிகர் அஸ்வின் குமார். 

இளம் நடிகர் அஸ்வின் குமார், சில படங்களில் தலைகாட்டியிருந்தாலும், பிரபலமான குறும்படங்கள் மூலம் யூடியூபர்களின் கவனம் ஈர்த்தவர். பின்னர் விஜய் டிவி சீரியல்களில் நடித்து புகழ் பெற்றார்.

இதனை அடுத்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் அனைவர் மனதிலும் நேரடியாக சென்றமர்ந்த அஸ்வினுக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகரித்தது. இதனிடையே அஸ்வின் நடித்த குட்டி பட்டாஸ் ஆல்பம் பாடல் கவனம் ஈர்த்தது.

இந்நிலையில் அஸ்வின் நடிக்கும் லோனர் எனும் புதிய சிங்கிள் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ள அஸ்வின், "நமக்காக நாம மட்டும் தான் இருப்போம்!" என்ற கேப்ஷனுடன் தமது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். 

 

அத்துடன் டிரைடண்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பில் உருவாகும் ஒரு காமெடி திரைப்படத்தில் நடித்து வரும் அஸ்வின் ஹீரோவாக நடித்து வருகிறார். இதுவே அஸ்வின் ஹீரோவாக நடிக்கும் முதல் படம். இதில் அஸ்வினுடன் இணைந்து காமெடி ரோலில் புகழ் நடிக்கிறார். 

ALSO READ: "இன்னைக்கு தான் கடைசி நாள்"!.. சிவாங்கி என்ன படிக்கிறார்? எந்த கல்லூரி? தீயாய் பரவும் ஃபோட்டோ!

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

CWC Ashwin Kumar new single loner FL release trending

People looking for online information on Ashwin Kumar, Trending, Vijay Television will find this news story useful.