CWC அஸ்வினின் ‘என்ன சொல்ல போகிறாய்’….”MOST WAITED டிஜிட்டல் ரிலீஸ்”- வெளியான UPDATE!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அஸ்வின் நடித்த என்ன சொல்ல போகிறாய் திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் திரையரங்குகளில் வெளியானது.

Advertising
>
Advertising

அஸ்வினின் என்ன சொல்ல போகிறாய்…

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்கள் நடிகர்கள் அஸ்வின் குமார் மற்றும் புகழ். இவர்கள் இருவரும் இணைந்து நடித்த படமாக “என்ன சொல்ல போகிறாய்” திரைப்படம் உருவானது. இந்த படத்தில் தேஜு அஸ்வினி மற்றும் அவந்திகா கதாநாயகிகளாக நடித்தனர். குணசித்திர கதாபாத்திரத்தில் டெல்லி கணேஷ், சுப்பு பஞ்சு ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். சென்னையின் நகர்ப்புற பகுதியில் நடைபெறும் காதல் காமெடி கதையாக "என்ன சொல்லப் போகிறாய்" திரைப்படம் உருவானது. இந்த படத்திற்கு ஒளிப்பதிவை ரிச்சர்ட் எம் நாதன் பணியாற்ற, விவேக்-மெர்வின் இசை அமைத்தனர். டிரைடண்ட் ஆர்ட் ரவீந்திரன் தயாரித்த இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குநர் ஹரிஹரன் இயக்கினார். இந்த திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 13 ஆம் தேதி ரிலீஸ் ஆனது…

ஆடியோ விழாவில் அஸ்வின்..

இந்த படத்தின் ஆடியோ விழா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சென்னையில் நடந்தது. அப்போது படத்தின் கதாநாயகனான அஸ்வின் தனது திரையுலக பயணம் பற்றியும், ரசிகர்கள் அளித்த ஆதரவு பற்றியும் பேசினார். ஆனால் அந்த நிகழ்வில் எதிர்பாராத விதமாக தான் கதை கேட்கும் முறைப் பற்றி பேசியது சர்ச்சையானது. அதையடுத்து அவர் மேல் விமர்சனங்கள் எழுந்த நிலையில் பின்னர் அவர் அதற்கு தன்னிலை விளக்கம் அளித்தார்.

ஓடிடி வெளியீடு…

இந்நிலையில் இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி 3 மாதங்கள் ஆன நிலையில் இதுவரை ஓடிடியில் வெளியாகாமல் இருந்தது. இப்போது அதுபற்றிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. வரும் ஏப்ரல் 15 ஆம் தேதி இந்த திரைப்படம் ஜி 5 ஓடிடியில் வெளியாகிறது. இது சம்மந்தமாக படத்தயாரிப்பு நிறுவனமான டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள ட்வீட்டில் ‘ most waited டிஜிட்டல் ரிலீஸ்… என்ன சொல்ல போகிறாய் உறுதியானது….  என்ன சொல்ல போகிறாய் ஏப்ரல் 15 ஆம் தேதி ஜி 5 ஓடிடியில் வெளியாகிறது’ என அறிவித்துள்ளனர்.

தனி ஆல்பங்களில் அஸ்வின்..

திரைப்படங்களில் நடிப்பது போலவே அஸ்வின் தனியிசை ஆல்பங்களிலும் நடித்து வருகிறார். அவரின் குட்டி பட்டாஸ் மற்றும் பேபி நீ சுகர் ஆகிய பாடல்கள் ஹிட்டாகி வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Tags : Ashwin, Pugazh

தொடர்புடைய இணைப்புகள்

CWC ashwin enne solla pogirai OTT release announced

People looking for online information on Ashwin, Pugazh will find this news story useful.