CWC 3 : மன்னிப்பு கேட்ட தாமு.? "எப்பவும் கலகலன்னு இருக்குறவங்க, இப்ப கண் கலங்குறாங்க.."

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியின் முதல் இரண்டு சீசன்கள், மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றிருந்தது.

Advertising
>
Advertising

”என்ன ஆனாலும் சரி…” வியர்வை வழிய ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் viral pic!

இந்த இரண்டு சீசன்களில், போட்டியாளர்களாக வந்தவர்களும், கோமாளிகளாக வந்தவர்களும் தமிழ் மக்கள் மத்தியில், மிகப் பெரிய அளவில் பிரபலம் அடைந்திருந்தனர்.

இந்த இரண்டு சீசன்களின் வெற்றியால், தற்போது 'குக் வித் கோமாளி சீசன் 3' நிகழ்ச்சியும் நடைபெற்று, வார இறுதியில் ஒளிபரப்பாகி வருகிறது.

'குக் வித் கோமாளி சீசன் 3'

இந்த மூன்று சீசன்களிலும், கோமாளிகளாக வந்த புகழ், பாலா, மணிமேகலை, சிவாங்கி உள்ளிட்டோரின் லூட்டிகள், ரசிகர்களை பெருமளவு ஈர்த்திருந்தது. இவர்களின் சேட்டை, தற்போதைய சீசனிலும் தொடர்ந்து அரங்கேறிக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே இருந்த கோமாளிகளுடன் சீத்தல், அதிர்ச்சி அருண், மூக்குத்தி முருகன், பரத் ஆகியோர் புதிய கோமாளிகளாக களமிறங்கினர். இதில் குக்குகளாக அம்மு அபிராமி, அந்தோனி தாசன், ராகுல் தாத்தா, ரோஷினி, கிரேஸ் கருணாஸ், ஷ்ருதிகா அர்ஜூன், சந்தோஷ் பிரதாப், தர்ஷன், வித்யூலேகா ராமன், மனோ பாலா ஆகியோர் பங்கேற்றனர்.

குழப்பத்தில் ஆழ்த்திய ப்ரோமோ

முன்னதாக, கொரோனா தொற்று கால கட்டத்தில், வீட்டில் முடங்கிக் கிடந்த மக்களின், ஸ்ட்ரெஸ் பஸ்டர் நிகழ்ச்சி என்ற பெயரையும் இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி பெற்றிருந்தது. இதனிடையே, சமீபத்தில் வெளியாகியுள்ள ப்ரோமோ ஒன்று, ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

பொதுவாக, குக் வித் கோமாளி செட்டுக்குள் நடுவர்களாக செஃப் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் ஆகியோர் இருந்தாலும், எப்போது கலகலவென தான் இருக்கும். ஒருமுறை கூட, மாறி மாறி சண்டை போட்டுக் கொள்வதோ, அல்லது கண்ணீரில் உருகும் காட்சிகளுக்கோ பெரிய அளவில் இடமிருக்காது.

மன்னிப்பு கேட்ட தாமு

ஆனால், எப்போது சிரிப்பலை கேட்டுக் கொண்டிருக்கும் குக் வித் கோமாளி செட்டில், கோமாளிகள் மற்றும் கோமாளிகள் அனைவரும் கண்ணீருடனும், சோகத்துடனும் இருக்கும் ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. "இங்க ஒரு சின்ன தப்பு நடந்துச்சு" என தொகுப்பாளர் ரக்ஷன் சொல்ல, தாமுவும், "நான் வருத்தமாக இருக்கிறேன். என்னை மன்னிக்கவும்" என கண்ணீருடன் குறிப்பிடுகிறார்.

என்னங்க உள்ள நடக்குது?

இதனைக் கண்ட போட்டியாளர் கிரேஸ், கோமாளிகள் சுனிதா, மணிமேகலை உள்ளிட்டோர் கண்ணீர் விட, மற்றவர்கள் சோகத்தில் மூழ்கி போயுள்ளனர். எத்தனை சீசன்கள் வந்தாலும், இப்படி ஒரு காட்சிக்கு குக் வித் கோமாளியின் இடமிருக்குமா என நினைத்த ரசிகர்கள், இந்த ப்ரோமோவின் காரணத்தினால், சற்று குழப்பம் அடைந்துள்ளனர்.

அதே போல, என்ன காரணமாக இருக்கலாம் என்பது பற்றியும், தங்களின் யூகத்தை ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

மன்மத லீலை ரிலீஸ் தாமதம்: "கடவுள் இருக்கார்".. வெங்கட் பிரபு பாணியில் தயாரிப்பாளர் ட்வீட்

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Cwc 3 dhamu and others started to cry new promo confuse fans

People looking for online information on Cooku with comali, Cooku with Comali season 3, Cooku with Comali Show, CWC3, Vijay Television, Vijay tv CWC3 will find this news story useful.