ஆதித்யா தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்தவர் லோகேஷ். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி - நயன்தாரா இணைந்து நடித்த நானும் ரௌடி தான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இவர் கடந்த மார்ச் மாதம் பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். நடிகர் விஜய் சேதுபதி நேரில் சந்திது நலம் விசாரித்தார். மேலும் மருத்துவத்திற்கும் உதவினார். நடிகர் சிவகார்த்திகேயன் உள்ளிட்டோரும் அவருக்கு உதவினர்
இதனையடுத்து முதற்கட்ட அறுவை சிகிச்சை முடிந்து உடல் நலம் தேறினார். தற்போது மெல்ல உடல் நலம் தேறினார். இந்நிலையில் அவருக்கு மேலும் ஒரு சர்ஜரி செய்யவிருப்பதாக Behindwoods-க்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்திருந்தார்.
தற்போது அந்த சிகிச்சையும் முடிந்து நலமுடன் இருக்கிறாராம். இதுகுறித்து நடிகை சனம் ஷெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் லோகேஷின் அம்மாவிடம் பேசியதாகவும் அவர் நலமாக இருப்பதாகவும் ஸ்கல் மாற்று அறுவை சிகிச்சை அவருக்கு வெற்றிகரமாக நடைபெற்றதாகவும் கூறினார். மேலும், இன்னும் சில நாட்களில் அவர் பூரண குணமாகி விடுவார் என்று நம்பிக்கை தெரிவித்ததாகவும் குறிப்பிட்டார்.