''அங்க போனப்போ திடீர்னு தலைவன் கவுண்டமணியை பார்த்தேன்'' - கிரிக்கெட் வீரர் பகிர்ந்த ஃபோட்டோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நகைச்சுவை நடிகர் கவுண்டமணி பல தலைமுறை ரசிகர்களையும் தனது நகைச்சுவையால் சிரிக்க வைத்துக்கொண்டிருக்கிறார். இப்பொழுது திரைப்படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டாரே தவிர, காமெடி தொலைக்காட்சிகளில் மூலம் மகிழ்வித்து தான் வருகிறார்.

Advertising
Advertising

அரசியல்ல இதெல்லாம் சாதரணப்பா, சத்ய சோதனை என சரவெடியாக அவர் கொடுக்கும் கவுண்டர்களை வைத்து தான் நாம் இன்றும் பிறரை கலாய்ப்பதற்கு பயன்படுத்தி வருகிறோம். மேலும் சமூக ஏற்றத்தாழ்வுகளையும், மூட நம்பிக்கைகளையும் போகிற போக்கில் தனது காமெடிகளின் மூலம் எள்ளி நகையாடுவார்.

இந்நிலையில் பிரபல கிரிக்கெட் வீரர் பத்ரிநாத் தனது ட்விட்டர் பக்கத்தில் கவுண்டமணியை சந்தித்தது  குறித்து புகைப்படம் பகிர்ந்திருந்தார். அதில், ''பல் மருத்துவரை சந்திக்க சென்ற போது அங்கே புகழ்பெற்ற தமிழ் காமெடி நடிகர் கவுண்டமணியை சந்தித்தேன். அரசியல்ல இதெல்லாம் சாதாரணப்பா'' என்று குறிப்பிட்டிருந்தார்.

தொடர்புடைய இணைப்புகள்

CSK Player Subramani Badrinath Shares a pic with Actor Goundamani | கவுண்டமணியுடன் புகைப்படம் பகிர்ந்த சிஎஸ்கே வீரர் பத்ரிநாத்

People looking for online information on Cricket, CSK, Goundamani, Subramani Badrinath will find this news story useful.