சிவாவை வைத்து சி.எஸ்.அமுதம் இயக்கிய திரைப்படம் தமிழ்ப்படம். இப்படம் வெளியாகி 10 ஆண்டுகள் ஆவதையடுத்து, சி.எஸ்.அமுதம் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
2010-ஆம் ஆண்டில், சி.எஸ்.அமுதன் சிவாவை வைத்து தமிழ்ப்படத்தை இயக்கினார். இத்திரைப்படத்தில் தமிழ் சினிமாவின் பல காட்சிகளை கேளியாக சித்திரித்த காட்சிகள் இடம்பெற்றிருந்தது. யார் மனதையும் புன்படுத்தாத வகையில் அமைக்கப்பட்ட நகைச்சுவை காட்சிகள் அனைவராலும் ரசிக்கப்பட்டது. இதையடுத்து தனது அடுத்த படத்திற்கு ரெண்டாவது படம் என பெயரிட்டு, அதற்கான வேலைகளில் சி.எஸ்.அமுதம் இறங்கினார். பல்வேறு காரணங்களால், அது வெளிவராமல் போனது. பிறகு சிவாவை வைத்து தமிழ்ப்படம் இரண்டாம் பாகம் எடுத்தார். அதன் காமெடி காட்சிகளும் ரசிகர்களால் ரசிக்கப்பட்டது.
இந்நிலையில் தமிழ்ப்படம் வெளியாகி நாளையோடு 10 ஆண்டுகள் நிறைவடைகிறது. இது குறித்த தன் ட்விட்டர் பதிவில், 'நாளையோடு தமிழ்ப்படம், நான், தயாரிப்பாளர் சசிகாந்த், தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகி பத்து ஆண்டுகள் கழிய போகிறது. ரசிகர்களின் பாதுகாப்புக்காக நேரு ஸ்டேடியத்தில் பிரமாண்ட விழா நடத்தாமல் தவிர்த்திருக்கிறோம். அதற்கு பதிலாக நாளை ஒரு மணிக்கு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிடுகிறோம்' என அவர் தெரிவித்துள்ளார்.
பொதுவாக தமிழ் சினிமாவில் பெரிய ஹீரோக்களின் பாடல் வெளியீடு, பிரமாண்டமான சினிமா நிகழ்ச்சிகள் நேரு ஸ்டேடியத்தில் நடப்பது வழக்கம். அதை கிண்டல் செய்யும் விதமாக, ரசிகர்களின் பாதுகாப்புக்காக நேரு ஸ்டேடியத்தில் நிகழ்ச்சி நடத்தபோவதில்லை என தன் பானியில் ட்விட்டியிருக்கிறார் அமுதன்.
அப்ப நாளைக்கு ஒரு மணிக்கு ஏதோ ஒரு சம்பவம் இருக்கு !