பிக்பாஸ் தமிழ் சிசன் 5 நிகழ்ச்சியில் 15வது நாள் ஒளிபரப்பாகியது.
இந்த நிகழ்ச்சியில் ஹவுஸ் மேட்ஸ் அனைவருக்கும் ஒரு புதிய டாஸ்க் கொடுக்கப்பட்டது. அந்த டாஸ்க்கின்படி, இந்த வாரம் பிக்பாஸ் வீட்டு கேப்டன் யார் என்று தீர்மானிக்கப் படுவதற்கான டாஸ்க் என்று கூறப்பட்டது.
இதற்கென சிபி, பாவனி, இசைவாணி, ராஜூ, இமான் அண்ணாச்சி உள்ளிட்டோர் தேர்ந்தெடுக்கப்பட்டதாக பிக்பாஸால் அறிவிக்கப்பட்டனர். இவர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் ஒரு முறை ஒலிக்கும் சத்தம் கேட்டதும், சிலை போல் நிற்க வேண்டும். அப்போது அவர்கள் முன்னால் நின்று மற்ற ஹவுஸ்மேட்ஸ் அவர்களை எந்தவிதமான உணர்வுக்கும் உட்படுத்தலாம்.
சிலையாக இருக்கும் போட்டியாளர்கள் அந்த உணர்வில் கரைந்து விட்டார்கள் என்றால் இந்த போட்டியில் இருந்து அவர்கள் நீக்கப்படுவார்கள். கடைசியில் யார் ஜெயிக்கிறார்கள் என்பதுதான் போட்டி. இதில் சிபி ஜெயித்துவிட்டார்.
முன்னதாக சிபியிடம் அனைவரும் நின்று கொண்டு ஏதாவது பேசுவதும் சிரிப்பதுமாக செய்ய அப்போது, பிரியங்கா, “எனக்கு இங்க வந்ததிலிருந்து உன் மீது ஒரு கிரஷ்.. ஏன் என்று தெரியவில்லை!” என்றெல்லாம் ஏகத்துக்கும் பேசினார். அவர் பேசும் பொழுது இது கலாட்டா பண்ணுவதற்கான பேச்சு தான், எப்படியாவது சிபியை நிலைகுலையச் செய்யும் பேச்சுதான் இது என்பது அனைவருக்குமே தெரிந்ததுதான்.
இருப்பினும் அனைவரும் பிரியங்காவுடன் இணைந்து கோரசாக சிபியை கலாய்த்து, அவரின் கவனத்தைச் சிதறடிக்க முயற்சி செய்தனர். ஆனால் கடைசியில் சிபி தான் இந்த போட்டியில் ஜெயித்து பிக் பாஸ் வீட்டின் புதிய கேப்டனாக மாறி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.