“ரச்சிதா க்ரஷ்.. நான் என் GIRL FRIEND-அ LOVE பண்றேன்.. பேச ஆரம்பிச்சிட்டேன்” .. ராபர்ட் EXCLUSIVE

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

Crush differes from love Robert on girlfriend issue bigg boss
Advertising
>
Advertising

Also Read | FIFA: கால்பந்து உலகக் கோப்பை.. கத்தார் சென்ற நெல்சன்.. நம்மள விட பெரிய மெஸ்ஸி FAN போலயே!

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டன் ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். வைல்டு கார்டு எண்ட்ரியாக  மைனா பங்கேற்றுள்ளார்.

Crush differes from love Robert on girlfriend issue bigg boss

இவர்களுள் பலரையும் கவர்ந்த ஜிபி முத்து முதலிலியே வெளியேறினார். இதனைத் தொடர்ந்து முதல் எலிமினேஷனாக ‘மெட்டி ஒலி’ சாந்தி வெளியேற்றப்பட்டார்.  இதற்கு அடுத்த கட்டமாக அசல் வெளியேற்றப்படுவதாக கமல் அறிவித்தார். அதன்பிறகு அடுத்த வாரத்தில் ஷெரினா, அதன் பின்னர் மகேஸ்வரி வெளியேறினர். கடைசியாக நிவாஷினி, ராபர்ட் ஆகியோர் வெளியேறியுள்ளனர். இந்த நிலையில், 50வது நாளன்று ஞாயிற்று கிழமை எபிசோடில் ராபர்ட் மாஸ்டர் வெளியேறுவதாக கமல்ஹாசன் அறிவித்தார்.

இந்த நிலையில், பிக்பாஸ் வீட்டில் இருந்து விலகியுள்ள ராபர்ட் மாஸ்டர், Behindwoods சேனலுக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார். அப்போது, "பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றது நல்ல உறவுகளுக்காகதான், அந்த வகையில் குயின்ஸி எனும் மகள் கிடைத்துள்ளாள். ரச்சிதா க்ரஷ் தான். க்ரஷ் வேற.. லவ் வேற. என் கேர்ள் ஃப்ரண்டு பிக்பாஸ் வீட்டுக்குள் நான் இருக்கும்போது மோதிரத்தை கொடுத்துவிட்டது மூக்குத்தியால் இருக்கலாம். ஆனால் ஒவ்வொருவருக்கும் க்ரஷ் ஃப்ரண்ட்ஸ், பெஸ்டி என இருக்கிறார்கள். என் கேர்ள் ஃப்ரண்டுக்கும் க்ரஷ் இருக்கிறார்கள்.

அவது க்ரஷ்ஷுடனும் நான் பேசுகிறேன். ஆனால் லவ் வேற. நான் என் கேர்ள் ஃப்ரண்டை தான் லவ் பண்ணுகிறேன். அவர் பெங்களூரில் இருக்கிறாள். பிக்பாஸில் இருந்து வந்ததுமே அவளிடம் பேசி புரியவைத்துவிட்டேன்" என குறிப்பிட்டுள்ளார்.

Also Read | திருடிய அசீம்கிட்டயே புலம்பிய குயின்சி.. அவரு மைண்ட் வாய்ஸ் என்னவா இருக்கும்? .. செம Funப்பா 😅

“ரச்சிதா க்ரஷ்.. நான் என் GIRL FRIEND-அ LOVE பண்றேன்.. பேச ஆரம்பிச்சிட்டேன்” .. ராபர்ட் EXCLUSIVE வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Crush differes from love Robert on girlfriend issue bigg boss

People looking for online information on Azeem, Bigg Boss 6, Bigg boss 6 tamil, Bigg Boss Tamil, Dhanalakshmi, Janany, Shivin will find this news story useful.