பிக்பாஸ் வீட்டில் கன்ஃபெஷன் அறைக்கு அழைத்து நிரூப்பிடம் பிக்பாஸ் கேட்ட கேள்விக்கு நிரூப் முதல் முறை எமோஷனலாகியுள்ளார். அப்போது பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியே போனதும் நீங்கள் முதலில் செய்ய போகும் வேலை என்ன? என பிக்பாஸ் கேட்டதற்கு, நிரூப் பதில் அளித்தார்.

அதில், “தன் அண்ணனை சென்று கட்டிப்பிடித்து அவருடன் பேசவேண்டும். இப்படி ஒரு ஷோவில், கலந்துகொண்ட எனக்கு முகமறியாதவர்களுடன் உறவு உண்டாகிறது. அதன் பின்னர் சின்னச் சின்ன சண்டைகள் வந்தாலும் கூட, இந்த இடங்களில் ஒரு நிஜமான பாசப்பிணைப்பு கிடைக்கிறது. அப்படி இருக்கும்போது 15 வருடன் எதனால் நான் என் அண்ணனுடன் பேசவில்லை என தெரியவில்லை. அதனை நான் உடைக்க வேண்டும். நான் சென்று அவரிடம் பேசப்போகிறேன்!” என நிரூப் கூறினார்.
மேலும் பிக்பாஸ் வீட்டுக்குள் மறக்க முடியாத தருணம் எது? என பிக்பாஸ் நிரூப்பிடம் கேட்டார், அதற்கு பதில் பேசிய நிரூப், “சில மாதம் முன்பு இறந்து போன என் பாட்டி இறக்கும்போது கூட நான் அழல. ஒரு சொட்டு கண்ணீர் விடல. அண்ணாச்சி போல யாரும் எனக்கு அப்படி ஒரு அன்பை கொடுத்ததில்லை. ஆனால் அண்ணாச்சி இந்த வீட்டை விட்டு போனபோது நான் பாத்ரூம் சென்று அழுதேன்.
அப்படி நான் அழுது பல வருஷம் ஆச்சு. அப்படி நான் அழுதது இந்த பிக்பாஸ் வீட்டில் மறக்க முடியாத தருணம். எப்போதுமே இந்த வீட்டுக்குள் நான் எனக்கு எமோஷனே இல்லை என கூறிக்கொண்டிருந்தேன். ஆனால் எனக்கும் எமோஷன்கள் இருக்கிறது என்பதை உணர்த்திய இந்த வீட்டுக்கும் அண்ணாச்சிக்கும் என் நன்றி.” என்று கூறினார்.
மேலும் பிக்பாஸ் குறித்து பேசிய நிரூப், “அப்பப்போ மச்சான் என நான் உங்களை கலாய்ப்பேன். கரெக்டா தப்பா என தெரியவில்லை. ஆனால் அதெல்லாம் நான் ஃப்ரண்லியாக சொன்னதுதான்” என நிரூப் கூறிக்கொண்டிருக்கும்போதே, “சரி மச்சான்!” போயிட்டு வா, என பிக்பாஸ் கூற, உடனே சர்ப்ரைஸில் சிரித்த நிரூப், “இனி நான் உங்களை மச்சான் என்று தான் கூப்பிட போறேன். ” என்று சொல்லி சிரித்தபடி கன்ஃபெஷன் ரூமில் இருந்து வெளியேறினார்.
Also Read: ‘தாமரை உங்களுக்கு தனி வணக்கம்!’..யாரு BiggBoss.. யாரு சரத்குமார்னே தெரில!