பிரபல கோலிவுட் ஹீரோவின் மகனுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த விராட் கோஹ்லி வீடியோ இதோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விக்ரம் பிரபுவின் மகனிற்கு பிரபல கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி  பிறந்த நாள் வாழ்த்துக் கூறிய வீடியோவை விக்ரம் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மணிரத்தினத்தின் உதவி இயக்குனர் மற்றும் படை வீரன் என்ற படத்தை இயக்கிய தனசேகர் இயக்கத்தில் வானம் கொட்டட்டும் எனும் படத்தில் விக்ரம் நடித்து வருகிறார் இப்படத்திற்கு மணிரத்தினம் கதை எழுதி தயாரிக்கிறார்.

இப்படத்தில் பிரபுவுக்கு ஜோடியாக மடோனா செபாஸ்டின் நடிக்கிறார் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இப்படத்தில் விக்ரம் பிரபுவின் தங்கையாக நடிக்கிறார் மேலும் இப்படத்தில் ராதிகா சரத்குமார், சரத்குமார், இயக்குனர் பாலாஜி சக்திவேல்  முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இந்நிலையில் நடிகர் விக்ரம் பிரபுவின் மகன் விராட்டுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார் பிரபல கிரிக்கெட் வீரர் கோஹ்லி. தன் மகனை வாழ்த்தியதற்கு நன்றி தெரிவித்ததுடன், கோஹ்லியின் வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் விக்ரம் பிரபு.

தொடர்புடைய இணைப்புகள்

Cricketer Virat Kohli Birthday Wishes to Vikram Prabhu Son Virat

People looking for online information on Vikram Prabhu, Virat Kohli will find this news story useful.