போடு வெடிய! விஜய் சேதுபதியின் புதிய படத்தில் நடிக்கும் INDIA CRICKET வீரர் ஸ்ரீசாந்த்! செம மாஸ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நானும் ரவுடி தான் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் விக்னேஷ் சிவன் - நயன்தாரா - விஜய் சேதுபதி இணையும் படம் "காத்துவாக்குல ரெண்டு காதல்".

Advertising
>
Advertising

இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாரா, சமந்தா நடிக்கின்றனர். லலித் குமார் தயாரிப்பில் முதல் பிரதி அடிப்படையில் விக்னேஷ் சிவன் இணைந்து தயாரிக்கிறார்.  விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் முதல் இரண்டு சிங்கிள் பாடல்கள் அனிருத் இசையில் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த படத்தில் ராம்போ எனும் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். R'anjankudi A'nbarasu M'urugesa B'oopathy O'hoondhiran என்பதின் சுருக்கமே ராம்போ. காதீஜா எனும் பெயரில் சமந்தா நடிக்கிறார். கண்மனி எனும் கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிக்கிறார். இந்த படம் வருகிற டிசம்பரில் ஒடிடி ரிலீசை தவிர்த்துவிட்டு நேரடியாக தியேட்டரிக்கல் ரிலீசாக உள்ளது. இந்த படத்தின் மூன்று முதல் லுக் போஸ்டர்  (15.11.2021) அன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.

இந்த படத்தின் டப்பிங் ஏற்கனவே துவங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதனை நயன்தாரா டப்பிங் பேசும் புகைப்படங்களுடன் ஒரு டிவீட் செய்து விக்னேஷ் சிவன் அறிவித்தார். அதில் "கண்மணி அன்போடு காதலன் நான் எழுதிய டைலாக்ஸ்க்கு நீ டப்பிங் பேசுவது சந்தோஷம்" என கூறி இருந்தார். இந்த படத்தின் டப்பிங்கை நடிகர் விஜய் சேதுபதியும்  (09.12.2021) அன்று துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த படத்தில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் முக்கிய கௌரவ வேடத்தில் நடிப்பதாக நம்பந்தகுந்த தகவல்கள் கிடைத்துள்ளன. ஸ்ரீசாந்த் ஏற்கனவே தனது தாய்மொழியான மலையாள படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

Cricketer Sreesanth play a role in vijay sethupathi film

People looking for online information on நயன்தாரா, ராம்போ, விக்னேஷ் சிவன், ஸ்ரீசாந்த், Nayanthara, Sreesanth, Vigneshsivan, Vijaysethupathi will find this news story useful.