இவரு ஆடுனாலே பார்ட்டிதான்.. புஷ்பா SONG-க்கு குத்தாட்டம் போட்ட கிரிக்கெட் பிரபலம்! வைரல் வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, சுனில், ஆகியோர் நடிப்பில் வெளிவந்து ரெக்கார்டு பிரேக்கிங் சாதனை புரிந்து வரும் திரைப்படம் புஷ்பா.

Advertising
>
Advertising

இரண்டு பாகங்கள்

இரண்டு பாகமாக வெளியாவதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்ட புஷ்பா படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் பிரமாண்ட பொருட்செலவில் தயாரித்துள்ளது.
தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம் என நான்கு மொழிகளில் வெளியான இப்படம் ஒரு 'பான் இந்தியா' படமாக இந்தப் படத்திற்கு அனைத்து மொழி ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

புஷ்பா: தி ரைஸ்

இப்படத்தின் முதல் பாகமாக 'புஷ்பா: தி ரைஸ்' படம் வெளியானது. ஆந்திர பிரதேச காடுகாளில் செம்மரக் கடத்தல் செய்யும் புஷ்பராஜ் என்கிற கேரக்டரை மையமாகக் கொண்ட இந்த படத்தில் அல்லு அர்ஜூன் புஷ்பராஜாக நடித்துள்ளார். குறிப்பாக படத்தின் ஓரிடத்தில், ‘புஷ்பா என்றால் ஃப்ளவர் இல்லை, ஃபயர்’ என அல்லு அர்ஜூன் பேசும் மாஸ் வசனம் பிரபலமானது.

பான் இந்தியா ஸ்டார் அல்லு அர்ஜூன்

இந்த படம் இந்தியிலும் வெளியானதை அடுத்து நடிகர் அல்லு அர்ஜூனுக்கு தென்னிந்தியாவை தாண்டி, வட இந்தியாவிலும் மார்க்கெட் தற்போது பெருமளவில் உருவாகியிருக்கிறது. அதாவது பான் இந்திய மார்க்கெட்டை புஷ்பா படத்தின் மூலம் நடிகர் அல்லு அர்ஜூன் பிடித்துள்ளார்.

புஷ்பா பட பாடல்கள்

பாடல்களை பொருத்தவரை, இந்த படத்தில், நடிகை சமந்தா நடிப்பில், தமிழில் ஆண்ட்ரியா பாடிய ஓ சொல்றியா மாமா, ராஜலட்சுமி செந்தில்கணேஷ் பாடிய சாமி சாமி பாடல் உள்ளிட்ட பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. இந்த படத்தில் நாயகி ரஷ்மிகா மந்தன்னா ஸ்ரீவள்ளி எனும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

ஸ்ரீவள்ளி பாடல்

இந்த கேரக்டரை மையமாக வைத்தும் ஒரு பாடல் இப்படத்தில் இடம் பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த பாடலில் தெலுங்கு வெர்ஷனான, ‘Sri valli’ பாடலுக்கு பிரபல கிரிக்கெட் வீரர் நடனம் ஆடும் வீடியோவை அவரே தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டதை அடுத்து இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

டேவிட் வார்னர் ஆட்டம்

ஆம், ஆஸ்திரேலிய கிரிக்கெட் பிரபலமான வார்னர் திரைப்பட பாடல்களுக்கு, குறிப்பாக இந்திய பாடல்களுக்கு ஏற்ப நடனம் ஆடி கவனம் ஈர்த்து வந்தார். ஏற்கனவே, கிரிக்கெட் வீரர் வார்னர் நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தில் இருந்து வாத்தி கம்மிங் உள்பட பல தமிழ் பாடல்களின் ஸ்டெப்ஸ்களை போட்டு அசத்தியவர்.

ரசிகர்களின் ஊக்குவிப்பு

இந்நிலையில் அவர், தற்போது புஷ்பா படத்தின் பாடலுக்கு நடனமாடியுள்ளார். அப்படி நடனம் ஆடும்போது ஸ்ரீவள்ளி பாடலில் வரும் சிக்னேச்சர் ஸ்டெப்ப்பை அவர் முயற்சித்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், இந்திய மற்றும் தென்னிந்திய திரைப்பட பாடல்களுக்கு வார்னர் டான்ஸ் ஆடுவதை பாராட்டி ஊக்கப்படுத்தி வருகின்றனர்.

Also Read: ஹீரோயின்கள், மாடல்னு 12 பேரு.. நடிகர் நகுல், BiggBoss முகேன் பங்கேற்கும் புதுமையான ரியாலிட்டி ஷோ!

தொடர்புடைய இணைப்புகள்

Cricketer David Warner viral dance for pushpa srivalli song video

People looking for online information on David Warner, David Warner Srivalli Song, David Warner viral dance, Pushpa, Srivalli song, Video will find this news story useful.