"எனக்கு அவங்க இன்னொரு அண்ணி" - நகைச்சுவை கலைஞர் கிரேஸி மோகன் மனைவி மரணம். கமல் இரங்கல்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல நகைச்சுவை நடிகர், வசனகர்த்தா கிரேஸி மோகனின் மனைவி நளினி மரணமடைந்த விஷயம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
>
Advertising

மேடை நாடகக் கலைஞர், இயக்குநர்,  திரைப்பட வசனகர்த்தா, நகைச்சுவை நடிகர் என பன்முக திறன் வாய்ந்த நடிகர் கிரேஸி மோகன். முன்னணி நடிகர்களின் படங்களுக்கு பணிபுரிந்துள்ளார். அவர்களின் திரைப்படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். இவர் கடந்த 2019-ம் ஆண்டு சென்னையில் காலமானார்.

நடிகர் பத்மஸ்ரீ கமல்ஹாசனின் நட்பு வட்டாரத்தில் முக்கியமானவரான கிரேஸி மோகன், உடல்நிலை குன்றி கவலைக்கிடமாக இருந்தபோதே நடிகர் கமல், அவரை மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்த்ததுடன், அவர் இறப்பு தருவாயில் கூட உடன் இருந்து துக்கத்தில் பங்கெடுத்துக் கொண்டார். கமல் படங்களில் அதிகம் பணிபுரிந்த கிரேஸி மோகன் அப்போது மரணமடைந்தார்.

இந்நிலையில்தான், நடிகர்  கிரேஸி மோகனின் மனைவி நளினி மோகன் மரணம் தொடர்பாக ட்விட்டரில் இரங்கல் பதிவு வெளியிட்டுள்ள கமல், "எனக்கு வாய்த்த இன்னொரு அண்ணியார் திருமதி. நளினி கிரேஸி மோகன் அவர்கள் இயற்கை எய்திவிட்டார். நட்பில் துவங்கி உறவாகவே மாறிவிட்ட அக்குடும்பத்தார் அனைவருடனும் துக்கம் பகிர்ந்து கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Crazy mohan wife passed away kamal haasan deep condolences

People looking for online information on Crazy Mohan, Kamal Haasan, Nalini Crazy mohan will find this news story useful.