நடிகர் விவேக்கின் மரணத்திற்கு இது தான் காரணம்! ஆய்வு முடிவு வெளியீடு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விவேக் கடந்த ஏப்ரல் 17 அன்று அதிகாலை மருத்துவமனையில் மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார்.

மரணமடைவதற்கு ஒரிருநாள் முன்பு ஏப்ரல் 15 அன்று  கொரோனாவுக்கான தடுப்பூசி போட்டிருந்தார். சென்னை ஓமந்தூர் பல்நோக்கு அரசு மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்திவிட்டு  செய்தியாளர்களை சந்தித்த நடிகர் விவேக், கொரோனா தடுப்பூசி பற்றி மக்களிடம் ஏற்பட்டுள்ள அச்சத்தைப்போக்கி விழிப்புணர்வை ஏற்படுத்தவே தனியார் மருத்துவமனைக்கு செல்லாமல் அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போட்டுக்கொண்டேன், தடுப்பூசி போட்டதற்குப் பிறகு எனக்கு எவ்வித பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை' என்று தெரிவித்தார்.

தடுப்பூசி செலுத்திய அடுத்த நாள் ஏப்ரல் 16 அன்று மாரடைப்பு ஏற்பட்டு சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அடுத்த நாள் ஏப்ரல் 17 அதிகாலையில் சிகிச்சை பலனின்றி விவேக் உயிரிழந்தார். விவேக் மரணத்திற்கு தடுப்பூசி போட்டுக்கொண்டதே காரணம் என வதந்திகள் உலவின.

இந்நிலையில் விழுப்புரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் சரவணன் என்பவர், நடிகர் விவேக் இறப்பிற்கு கொரோணா தடுப்பூசி தான் காரணம் என்று புது டெல்லி தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் நடிகர் விவேக் மரணம் குறித்து இரண்டு மாதத்திற்குள் விசாரணை நடத்தி ஆய்வறிக்கை சமர்பிக்க தேசிய மனித உரிமைகள் ஆணையம் மத்திய சுகாதாரத்துறைக்கு உத்தரவிட்டது.

விவேக் மரணம் குறித்து விசாரணை மேற்கொண்ட மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் நோய்த்தடுப்பு பிரிவு நடிகர் விவேக் மரணத்திற்கும் தடுப்பூசிக்கும் சம்பந்தமில்லை என்று தெரிவிததுள்ளனர் மேலும் விவேக் மரணத்திற்கு உயர் ரத்த அழுத்தத்தால் ஏற்பட்ட மாரடைப்பே காரணம் எனவும் அந்த ஆய்வறிக்கையில் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

 

தொடர்புடைய இணைப்புகள்

Covid Vaccine is not the cause of actor Vivek's death!

People looking for online information on Covaxin, Covid19, Vaccine, Vivek will find this news story useful.