இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்று ஒரு வருட காலத்துக்கும் மேலாக தீவிரமாக ஆட்டி படைத்துக் கொண்டு வருகிறது.
இந்த கொரோனா தொற்றின் இரண்டாவது அலை இந்தியாவில் தீவிரமடைந்து இருக்கிறது. இந்த நோய்த்தொற்றை எதிர்ப்பதற்கு இந்திய அரசும் மாநில அரசுகளும் பல்வேறு தடுப்பு முறைகளைக் கையாண்டு வருகின்றனர். குறிப்பாக தமிழக அரசு கொரோனாவுக்கு எதிரான பல்வேறு தடுப்பு வழிமுறைகளை கையாள சொல்லி மக்களுக்கு அறிவுறுத்தி வருகிறது. தற்போது கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை உண்டு பண்ணும் வகையில் அனைவருக்கும் தடுப்பு செலுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த சூழலில் பலரும் பாதிக்கப்பட்டு மருத்துமனையை நாடி வருகின்றனர். கொரோனாவை பொறுத்தவரை வருமுன் காப்பதே சிறந்தது என்கிற அடிப்படையில் வருவதற்கு முன்பாக கையாளப்பட வேண்டிய தடுப்பு வழி முறைகளை அனைவரும் கையாள வேண்டும் என்பதில் தான் கொரோனாவை வெல்லும் உத்தி இருக்கிறது. இந்த நிலையில் கொரோனாவுக்கு எதிரான எளிய தடுப்பு வழிமுறைகளாக கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான சில வழிகாட்டு நெறி முறைகளை நாம் பின்பற்ற வேண்டி இருக்கிறது.
அவற்றின் முக்கிய அங்கங்களாக மாஸ்க் அணிதல், சமூக இடைவெளி, தனிமனித இடைவெளி வீட்டிற்குள்ளேயே தனித்திருத்தல், சோப்பு போட்டு கைகளை அடிக்கடி சுத்தம் செய்தல் உள்ளிட்ட வழிமுறைகளை நாம் கையாள முடியும். இதில் அடிப்படையிலான மாஸ்க் அணிதல் என்கிற வழிமுறையானது ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு கொரோனாவை பரவ விடாமல் தடுப்பதற்கான எளிய வழிமுறை.
ஆனால் பலரும் மாஸ்க் அணிவதில்லை. பலர் முறையாக மாஸ்க் அணிவதில்லை என்கிற குற்றச்சாட்டுகள் தொடர்ந்து இருந்துகொண்டே இருக்கின்றன. இந்த நிலையில்தான் பிரபல பிராங்க் நடிகர் சரித்திரன் வட என்கிற நிகழ்ச்சி மூலம் மாஸ்க் அணியாமல் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் சுற்றி வருபவர்களை பிராங்க் செய்து தெறிக்கவிட்டிருக்கிறார்.
மாநகராட்சி அதிகாரிகளுடன் சென்ற ‘வட’ சரித்திரன் மாஸ்க் அணியாத பயணிகள், ஊழியர்கள், மக்களை பிராங்க் செய்து பின்னர் மாஸ்க் அணிதலின் அவசியத்தை பற்றிய விழிப்புணர்வை ஒவ்வொருவரிடமும் ஜாலியாக ஏற்படுத்துகிறார்.
இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அமலாபால் நடிப்பில் உருவான ஆடை திரைப்படத்தின் மூலம் நடிகராகவும் வட சரித்திரன் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.