'பத்து தல' வெற்றிக்காக.. வித்தியாசமான கோஷத்துடன் பழனியில் சாமி தரிசனம் செய்த கூல் சுரேஷ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் சில படங்களில் நகைச்சுவை நடிகராகவும், சிறிய ரோல்களிலும் நடித்தவர் நடிகர் கூல் சுரேஷ்.

Cool Suresh Visiting Palani Murugan Temple for Pathu Thala
Advertising
>
Advertising

Also Read | PS1 பொன்னியின் செல்வனை தொடர்ந்து ஜெயம் ரவியின் புதிய படம்.. ரிலீஸ் எப்போ? BREAKING அப்டேட்

சில திரைப்படங்களில் நடித்துள்ள கூல் சுரேஷ், ஒவ்வொரு படம் ரிலீஸ் ஆகும் போதும், தியேட்டர் வாசலில் வித்தியாசமான கெட்டப்புகளில் வந்து  விளம்பரம் செய்து ட்ரெண்ட் ஆனவர். இதன் காரணமாக வெள்ளி கிழமை நாயகன், யூடியூப்பர்ஸ் சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்படுவர் நடிகர் கூல் சுரேஷ்.

சிம்புவின் தீவிர ரசிகரான இவர், வெந்து தணிந்தது காடு, தலைவன் சிம்புவுக்கு வணக்கத்தை போடு போன்ற வசனங்களால் பிரபலமானவர். தற்போது சிம்பு நடிக்கும் 'பத்து தல'படத்தின் வெற்றிக்காக கூல் சுரேஷ் செய்துள்ள செயல் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

மாநாடு, வெந்து தணிந்தது காடு திரைப்படத்தை தொடர்ந்து, நடிகர் சிம்பு அடுத்ததாக கிருஷ்ணா இயக்கத்தில் 'பத்து தல' திரைப்படத்தில் நடித்துள்ளார்.

கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஆன 'மஃப்ட்டி' படத்தின் ரீமேக்காக 'பத்து தல' படம் உருவாகிறது.

இந்த திரைப்படத்தில், சிம்புவுடன் கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர், கலையரசன், இயக்குனர் கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

தற்போது இந்த படத்தின் பின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. மார்ச் மாதம் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பத்து தல படம் வெற்றி பெற வேண்டி கூல் சுரேஷ் பழனி முருகன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்துள்ளார். மேலும்,  "STR-ன் பத்து தல.‌‌. சிம்புனா கெத்து தல" என்ற வாசகத்துடன் போஸ்டர் ஒன்றை எடுத்தும் கோயிலுக்கு சென்றுள்ளார். பழனி சிம்பு ரசிகர் மன்ற நிர்வாகிகளும் கூல் சுரேஷ் உடன் முருகன் கோயிலுக்கு சென்றனர்.

Also Read | நெற்றி நிறைய விபூதி பூசி பழனி மலையில் கிரிவலம் சென்ற சந்தானம்..! வைரலாகும் வீடியோ

'பத்து தல' வெற்றிக்காக.. வித்தியாசமான கோஷத்துடன் பழனியில் சாமி தரிசனம் செய்த கூல் சுரேஷ்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Cool Suresh Visiting Palani Murugan Temple for Pathu Thala

People looking for online information on Cool Suresh, Palani Murugan Temple, Pathu Thala will find this news story useful.