விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் தற்போது ட்ரெண்டிங்காகி வருகிறது.
இந்நிகழ்ச்சியில் இதுவரையில் கனி,பவித்ரா உள்ளிட்டோர் ஃபைனலிஸ்டுகள் ஆகியுள்ளனர். பவித்ராவை ஃபைனலிஸ்டாக மாற்றியதன் பங்கு புகழுக்கு உண்டு என்று அனைவரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த சீசனில் ஷகிலாவுடன் இணைந்து சமைத்த பப்பு Behindwoods-க்கு பிரத்தியேகமாக பேட்டி அளித்துள்ளார்.
இதில் பப்பு, “எதார்த்தமாக ஆரம்பிக்கப்பட்டதுதான் குக் வித் கோமாளி முதல் சீசன். அதன் எதிர்பாராத வெற்றியைத் தொடர்ந்து 2-வது சீசனை திட்டமிட்டோம். ஆனால் முதல் சீசனை பிரேக் பண்ணியதற்கு உதாரணமாக இந்த சீசன்-2 இருக்க வேண்டும் என நினைத்தோம். இதே போல் ஷகிலா அம்மாவுடனான அம்மா-பையன் பந்தம் புதிதாக இருந்தது. ஒருவரின் (ஷகிலாவை குறிப்பிட்டு) இமேஜை மாற்றுவது சாதாரணமானது இல்லை. ” என பல்வேறு விஷயங்களை பகிர்ந்துகொண்டுள்ளார்.
மேலும், ஆரம்பத்தில் எல்லாம் ஷகிலா அம்மா சீரியஸாக இருப்பார் என்றும், இந்த சீசனில் ஷகிலா அம்மா ஃபைனலிஸ்ட் ஆகாததற்கு, “வந்ததுக்கு நீ என்ன பண்ண முடியுமோ அத பண்ணிட்டு போயிட்ட” என்பது போல் ஷகிலா அம்மா தன்னை ஒரு பார்வை பார்த்தார் என்றும் சிரிப்புடன் சொல்கிறார் பப்பு. இதேபோல் வெங்கடேஷ் பாத் அவ்வப்போது பங்கேற்பாளர்களுக்காக உணவு தயாரித்து தருவதை குறிப்பிட்ட பப்பு, பாபா பாஸ்கர் வித்தியாசமான ரெசிபியை செய்து தருவார் என்றும் அவரை தனக்கு பிடிக்கும் என்றும் இந்த சீசனில் மாஸ்டருடன் இணைந்து சமைக்க விரும்புவதாகவும் குறிப்பிட்டார்.
குறிப்பாக, புகழ் பவித்ராவின் கிச்சன் பக்கம் சென்றுவிட்டால், தர்ஷா புகழ் மீது பொசசிவ் ஆகிவிடுவார். ஒருமுறை அப்படி சிக்கிக்கொண்ட புகழோ, இது மேன்ஷன் மாதிரிமா யார் வேணாலும் வந்து போவாங்க என்று சமாளிக்க, அதற்கு செருப்பு பிஞ்சுடும் புகழ் என தர்ஷா கடுப்பில் கத்திவிட்ட சம்பவத்தை பற்றியும் பப்பு குறிப்பிட்டுள்ளார்.
ALSO READ: தனுஷ் பட நடிகைக்கு திருமணம்! வைரல் ஆகும் ப்ரீ வெட்டிங் ஷூட் வீடியோ!