விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி பலதரப்பட்ட ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டிருக்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 2வது சீசன் நிறைவுபெற்றுள்ளது. இதன் நிறைவு எபிசோடு இந்த வாரம் ஒளிபரப்பாகவுள்ளது. இந்த நிறைவு எபிசோடில் நடிகர் சிம்பு கலந்துகொண்டுள்ளார்.

இந்நிலையில் அஷ்வின் இதுபற்றி ஒரு உருக்கமான மெசேஜை தமது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். “இது குக் வித் கோமாளி அல்ல, இது எனக்கு குக் வித் ஃபேமிலி. என்ன ஒரு அனுபவம்! இந்த பயணம் எனக்கு மிகவும் சிறப்பானது. என் நினைவுகளில் பொதிந்திருக்கும்.
இந்த நிகழ்ச்சி என்னைப் போன்று கனவு காண்பவர்களுக்கான அங்கீகாரத்தை அளித்துள்ளது. இந்த நிகழ்ச்சி முடிந்துவிட்டது என்கிற முடிவுக்கு நான் இன்னும் வரவில்லை. எந்த நாளிலும், எந்த நேரத்திலும் நான் மற்ற எல்லா பணிகளையும் விட்டுவிட்டு இந்த அணியுடன் ஒரு நிமிடமாவது செலவிட வருவேன். நான் இன்னும் என்ன கேட்க முடியும்! இணை போட்டியாளர்கள் & ஜோடிகள் அவுட் ஆஃப் தி வேர்ல்ட் மற்றும் டாப் நாட்ச். கேமரா மேன் முதல் எடிட்டர்கள் வரை ஜட்ஜஸ் முதல் இயக்குநர் மற்றும் சேனல் வரை இதுபோன்ற ஒரு சென்சேஷனலை ஏற்படுத்திய அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
இறுதியாக, பார்வையாளர்களான நீங்கள் மிகவும் அற்புதம், உங்கள் அளவில்லா அன்பு, ஆதரவு மற்றும் மிக முக்கியமாக நீங்கள் எங்களுக்காக செலவழித்த நேரம், வெறுமனே வார்த்தைகளால் அவற்றை சொல்வதற்கில்லை. சல்யூட்!!!! இந்த நிகழ்ச்சியின் ஒவ்வொரு போட்டியாளருக்கும் ஜோடிகளுக்கும் உங்களது அன்பும் ஆதரவும் என்றென்றும் தொடரும் என்று நம்புகிறேன்.
அதிலும் எங்கள் சிவாங்கிக்கு ஒரு சிறப்பு குறிப்பு உள்ளது. நீ தான் முதலில் என்னை கம்ஃபோர்ட்டாக இயங்க வைத்தாய். எனது இன்னொரு வேடிக்கையான பக்கத்தை வெளியே கொண்டு வந்து நிஜமான என்னை வெளியில் காட்டியது நீயே தான். நீ தொடர்ந்து என்னிடம் கேட்கும் அந்த ஒரு கேள்வி.. ‘நீ என்னை மிஸ் பண்ணுவியா?’ - ஆம் !! மிகவும் மிஸ் பண்ணப்படுவாய் நீ! இவ்வாறு அஷ்வின் அந்த குறிப்பில் தெரிவித்துள்ளார்.
ALSO READ: 'மறைந்த' விஜய் டிவி சீரியல் நடிகரின் கதாபாத்திரத்தில் நடிக்கப் போவது யார்? வெளியான தகவல்.