அட்றா சக்க... குக் வித் கோமாளி நிகழ்ச்சி இந்த மொழியில் ரீமேக் ஆகிறது... புரோமோ வெளியானது..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி பற்றி தெரியாதவர்களே இருக்க முடியாது. வரவர பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இணையான ரசிகர் பட்டாளம் இந்த நிகழ்ச்சிக்கும் உருவாகியுள்ளது. போட்டியாளர்களுக்கும் சரி, கோமாளிகளுக்கும் சரி தனித்தனியே ரசிகர் பட்டாளம் இருக்கிறது என்றே சொல்லலாம். அதிலும் முக்கியமாக புகழ், பாலா, ஷிவாங்கி, மணிமேகலை என கடந்த சீசனில் இருந்த கோமாளிகள் இந்த சீசனிலும் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. போட்டியாளர்கள் கோமாளிகளை வைத்துக் கொண்டு சமைக்க படாதபாடு படும் காட்சிகள் ரசிகர்களை குலுங்கி, குலுங்கி சிரிக்க வைக்கிறது. இந்நிலையில் இந்த ஷோவிற்காக ரசிகர்கள் காத்திருந்து பார்க்கும் அளவிற்கு மிகப்பெரிய ரீச் அடைந்துள்ளது.

இந்நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி பற்றி அறிமுகம் என்பதை தேவை இல்லாத ஒன்று. ஏனென்றால் அவ்வளவு பெரிய ரசிகர் பட்டாளத்தை இந்த நிகழ்ச்சியில் உருவாக்கியுள்ளது. ஒவ்வொரு வாரமும் நகைச்சுவை கூடிக்கொண்டே தான் இருக்கிறதே தவிர, குறையவில்லை.  தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ள சீசன் 2-வில் கனி, ஷகிலா, பாபா பாஸ்கர், அஸ்வின், பவித்ரா ஆகியோர் இருக்கின்றனர். இந்த வாரம் அஸ்வின் அல்லது பவித்ரா எலிமினேட் செய்யப்பட கூடும் என்பதால், இன்னும் போட்டி வரும் வாரங்களில் கடுமையாகும் என்று தெரிகிறது. தமிழ் ரசிகர்களை மொத்தமாக கட்டிப் போட்டிருக்கும் இந்நிகழ்ச்சி தற்போது கன்னடத்தில் ரீமேக் செய்யப்படுகிறது. 'குக் வித் கிறுக்கு'  என்று பெயரிடப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சியின் புரோமோ தற்போது வெளியாகியுள்ளது. இதனை பார்த்த தமிழ்  ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அட்றா சக்க... குக் வித் கோமாளி நிகழ்ச்சி இந்த மொழியில் ரீமேக் ஆகிறது... புரோமோ வெளியானது..! வீடியோ

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Cooku with comali show to be remaked குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரீமேக்

People looking for online information on Cooku with comali will find this news story useful.