COOKU WITH COMALI : புகழை வம்புக்கு இழுத்த ஹன்சிகா 😅.. திருப்பி அவரு சொன்ன விஷயம் தான் 😂!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்களில் பிரபலமான ஒன்று குக் வித் கோமாளி. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்த நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி ஷோ பார்க்கப்படும் நிலையில், இதன் சிறப்பம்சமாக இருப்பதே சீரியஸான விஷயமாக இருக்கும் சமையலை மிகவும் வித்தியாசமாக பொழுதுபோக்கு மற்றும் விறுவிறுப்பு அம்சங்களுடன் காண்பிப்பது தான்.

Image Credit : Vijay Television

Advertising
>
Advertising

இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக பிரபல செஃப்கள் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் ஆகியோர் மிகவும் அரட்டை அடித்து அனைவரையும் கலாய்த்துக் கொண்டே இருப்பதால் நிகழ்ச்சி இன்னும் சுவாரஸ்யமாகவும் செல்கிறது.

இதுவரை 3 சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில், அனைத்துமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. தொடர்ந்து, 4 ஆவது குக் வித் கோமாளி சீசனும் தற்போது ஆரம்பமாகி நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

குக் வித் கோமாளி 4 ஆவது சீசனில் மைம் கோபி, விசித்ரா, ஷெரின், ராஜ் ஐயப்பா, காளையன், கிஷோர் ராஜ்குமார், சிவாங்கி, ஸ்ருஷ்டி டாங்கே, விஜே விஷால், ஆண்ட்ரியா நவுரிகட் உள்ளிட்ட 10 பேர் போட்டியாளர்களாக களமிறங்கி உள்ளனர். இவர்களுடன் பழைய மற்றும் புதிய கோமாளிகளும் கோதாவில் இறங்கியுள்ள சூழலில், குக் வித் கோமாளி நிகழ்ச்சி இன்னும் அமர்க்களமாக சென்று கொண்டிருக்கிறது.

Image Credit : Vijay Television

இதனிடையே, முதல் எலிமினேஷனாக கிஷோர் ராஜ்குமார் வெளியேறி இருந்தார். தொடர்ந்து மற்ற 9 போட்டியாளர்கள் தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சமையல் செய்து வருகின்றனர். பொதுவாக, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், பல பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை இன்னும் சிறப்பாக்கவும் செய்வார்கள்.

அந்த வகையில், இந்த சீசனில் நடிகர்கள் ஆர்ஜே பாலாஜி, கவின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிலையில், தற்போது நடிகை ஹன்சிகா மோத்வானியும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளார்.

Image Credit : Vijay Television

நடிகை ஹன்சிகா மோத்வானி, தன்னுடைய குடும்ப நண்பரான மும்பையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் சோஹேல் கதூரியாவை  கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 4 ஆம் தேதி  ஜெய்ப்பூர் நகரத்தில் உள்ள 450 வருடங்கள் பழமை வாய்ந்த மண்டோடா ஃபோர்ட் அரண்மனையில் திருமணம் செய்து கொண்டார். மிகவும் அமர்க்களமாகவும் இந்த திருமணம் நடைபெற்றிருந்தது. மேலும் ஹன்சிகா மோத்வானியின் திருமண வீடியோ, பிரபல டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஒடிடியில் வெளியாகி இருந்தது.

Image Credit : Vijay Television

இதனைத் தொடர்ந்து, தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார் ஹன்சிகா. இது தொடர்பான ப்ரோமோ காட்சிகள் வெளியாகி உள்ள சூழலில், குக் வித் கோமாளி நிகழ்ச்சியை கொஞ்சம் கொஞ்சம் பார்த்துள்ளதாக குறிப்பிட்ட ஹன்சிகா, கோமாளி புகழை பார்த்து, "நிறைய பொண்ணுங்க கூட நீ Flirt பண்றே. உனக்கு கல்யாணம் ஆயிடுச்சுல்ல" என கேட்கிறார். "கல்யாணம் ஆயிடுச்சா உங்களுக்கு?" என அப்படியே வேடிக்கையாக திரும்ப ஹன்சிகாவிடம் கேட்கவும் செய்கிறார் புகழ்.

தொடர்புடைய இணைப்புகள்

Cooku with Comali season 4 hansika motwani as guest

People looking for online information on Cooku With Comali 4, Hansika Motwani, Pugazh will find this news story useful.