புடவையை வெட்டி வீசிய பவித்ரா... செம வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஷூட்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி பற்றி தெரியாதவர்களே இருக்க முடியாது. வரவர பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இணையான ரசிகர் பட்டாளம் இந்த நிகழ்ச்சிக்கும் உருவாகியுள்ளது. போட்டியாளர்கள் கோமாளிகளை வைத்துக் கொண்டு சமைக்க படாதபாடு படும் காட்சிகள் ரசிகர்களை குலுங்கி, குலுங்கி சிரிக்க வைக்கிறது. போட்டியாளர்களுக்கும் சரி, கோமாளிகளுக்கும் சரி தனித்தனியே ரசிகர் பட்டாளம் இருக்கிறது என்றே சொல்லலாம். அதிலும் முக்கியமாக புகழ், பாலா, ஷிவாங்கி, மணிமேகலை என கடந்த சீசனில் இருந்த கோமாளிகள் இந்த சீசனிலும் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்று சனிக்கிழமை நிகழ்ச்சிக்கான புரோமோக்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. ஆனால் இந்த வாரமும் பவித்ரா பங்கேற்க வில்லை என்பதால், அவரது ரசிகர்கள் பலரும் விஜய் டிவியின் வீடியோக்களுக்கு கீழே "பவித்ரா எங்கே?" என்று கமென்ட் செய்ய ஆரம்பித்துவிட்டனர். ஆனால் அதற்கு தனிப்பட்ட சில காரணங்களால் தான் இரண்டு வாரங்களாக பங்கேற்க முடியவில்லை என்றும் விரைவிலேயே குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு திரும்புவேன் என்றும் அவர் கூறியுள்ளார். இந்நிலையில் சமீபத்தில் பவித்ரா செய்த போட்டோஷூட் ஒன்று வைரலாகி வருகிறது. அதில் புடவை கட்டியவாறு நிற்கும் பவித்ரா கத்தரிக்கோலால் தனது புடவையை பாதி வெட்டிவிட்டு மாடர்னாக  நிற்கிறார். இந்த போட்டோ ஷூட் சமீபத்தில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

புடவையை வெட்டி வீசிய பவித்ரா... செம வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஷூட்..! வீடியோ

Tags : Pavithra

Cooku with comali pavithra latest phootshoot புடவையை வெட்டி வீசிய பவித்ரா

People looking for online information on Pavithra will find this news story useful.