குக் வித் கோமாளி கனி அக்காவின் அழகான இரண்டு மகள்கள்... அவரே வெளியிட்ட போட்டோ..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

 விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி பற்றி தெரியாதவர்களே இருக்க முடியாது. வரவர பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இணையான ரசிகர் பட்டாளம் இந்த நிகழ்ச்சிக்கும் உருவாகியுள்ளது. போட்டியாளர்கள் கோமாளிகளை வைத்துக் கொண்டு சமைக்க படாதபாடு படும் காட்சிகள் ரசிகர்களை குலுங்கி, குலுங்கி சிரிக்க வைக்கிறதுபோட்டியாளர்களுக்கும் சரி, கோமாளிகளுக்கும் சரி தனித்தனியே ரசிகர் பட்டாளம் இருக்கிறது என்றே சொல்லலாம். அதிலும் முக்கியமாக புகழ், பாலா, ஷிவாங்கி, மணிமேகலை என கடந்த சீசனில் இருந்த கோமாளிகள் இந்த சீசனிலும் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

cooku with comali kani daughters photo குக் வித் கோமாளி கனி மகள்கள்

இந்நிலையில் இந்த சீசனில் போட்டியாளர்களாக பாபா பாஸ்கர், ஷகிலா, கனி, தர்ஷா குப்தா, பவித்ரா லட்சுமி, தீபா மற்றும் மதுரை முத்து வெறித்தனமாக களம் இறங்கினர். இந்நிலையில் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் பாபா பாஸ்கர், கனி, ஷகிலா, அஷ்வின் ஆகியோர் உள்ளனர். அதேபோல்  ஆரம்பம் முதலே தனது சிறப்பான பங்களிப்பு மூலம் கவனம் பெற்று இருப்பவர் கனி. இவர் யார் என்பது பலரும் தெரியாத விஷயமாக இருக்கலாம். இவர் மக்கள் டிவியில் ஒளிபரப்பான 'சொல் விளையாட்டு' என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர். பிரபல இயக்குனர் அகத்தியனின் மகளான இவர், பிக்பாஸ் சீசன் 2வில்  பங்கேற்ற நடிகை விஜய லட்சுமியின் சகோதரி மற்றும் இயக்குனர் திருவின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவர் தனது இரண்டு மகள்களுடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் இதோ..!

Tags : Kani

மற்ற செய்திகள்

Cooku with comali kani daughters photo குக் வித் கோமாளி கனி மகள்கள்

People looking for online information on Kani will find this news story useful.