"என் பேரை கெடுக்க சிலர்".... குக் வித் கோமாளி பவித்ரா வெளியிட்ட திடீர் பதிவு... என்ன நடந்தது...?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி பற்றி தெரியாதவர்களே இருக்க முடியாது. வரவர பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இணையான ரசிகர் பட்டாளம் இந்த நிகழ்ச்சிக்கும் உருவாகியுள்ளது. போட்டியாளர்கள் கோமாளிகளை வைத்துக் கொண்டு சமைக்க படாதபாடு படும் காட்சிகள் ரசிகர்களை குலுங்கி, குலுங்கி சிரிக்க வைக்கிறது. போட்டியாளர்களுக்கும் சரி, கோமாளிகளுக்கும் சரி தனித்தனியே ரசிகர் பட்டாளம் இருக்கிறது என்றே சொல்லலாம். அதிலும் முக்கியமாக புகழ், பாலா, ஷிவாங்கி, மணிமேகலை என கடந்த சீசனில் இருந்த கோமாளிகள் இந்த சீசனிலும் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த சீசனில்  ரம்யா பாண்டியனை போலவே இந்த சீசனில் பவித்ரா, தர்ஷா குப்தா என இரண்டு இளம் நடிகைகள் களமிறங்கியுள்ளனர். இந்நிலையில் பவித்ரா தற்போது ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அவர் கூறும்போது "சில டிவிட்டர் பக்கங்கள் என்னை போலவே வலம் வருகின்றனர். டிவிட்டரில் நான் அதிகமாக ஆக்டிவாக இருப்பது இல்லை. இன்ஸ்டாகிராமில் தான் அதிகம் பகிர்ந்து இருக்கிறேன். அதை ஒரு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு சிலர் என் பெயரை கெடுக்க பார்க்கிறார்கள். 200% அதற்கு நான் பொறுப்பல்ல. இதுதான் என்னுடைய ஒரிஜினல் டிவிட்டர் பக்கம். உங்களுடைய அன்புக்கு நன்றி" என்று கூறியுள்ளார்.

"என் பேரை கெடுக்க சிலர்".... குக் வித் கோமாளி பவித்ரா வெளியிட்ட திடீர் பதிவு... என்ன நடந்தது...? வீடியோ

Cooku with comali fame pavithra releases a video குக் வித் கோமாளி பவித்ரா பதிவு

People looking for online information on Cooku with comali will find this news story useful.