குக் வித் கோமாளி இயக்குநர் இவர்தானாம்... இவ்ளோ சின்ன வயசில் நிகழ்ச்சியை ஹிட் அடிச்சிட்டாரே..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி பற்றி தெரியாதவர்களே இருக்க முடியாது. வரவர பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இணையான ரசிகர் பட்டாளம் இந்த நிகழ்ச்சிக்கும் உருவாகியுள்ளது. போட்டியாளர்கள் கோமாளிகளை வைத்துக் கொண்டு சமைக்க படாதபாடு படும் காட்சிகள் ரசிகர்களை குலுங்கி, குலுங்கி சிரிக்க வைக்கிறது. போட்டியாளர்களுக்கும் சரி, கோமாளிகளுக்கும் சரி தனித்தனியே ரசிகர் பட்டாளம் இருக்கிறது என்றே சொல்லலாம். இந்நிகழ்ச்சி வாராவாரம் சுவாரசியம் குறையாமல் ரசிகர்களை சிரிக்க வைக்கிறது. அதிலும் பலரைப் பற்றி மக்கள் வைத்திருக்கும் பிம்பமே இந்த சீசன் 2 மூலமாக மாறியுள்ளது. சீரியஸான மனிதர்களாக இருப்பார்கள் என்று நினைத்த பலரும் மிகவும் எளிமையான, சுவாரசியமான, ரசிக்கக்கூடிய மனிதர்களாக இருப்பதை பார்க்க முடிகிறது. அதேபோல் கோமாளிகள் உடன் போட்டியாளர்கள் பழகும் விதமும் ரசிக்கும்படி உள்ளது.

குக் வித் கோமாளி சீசன் 2 தற்போது முடிவுக்கு வந்துள்ளது. கடந்த ஏப்ரல் 14-ம் தேதி 4 மணி நேர தொடர் ஒளிபரப்பாக இந்நிகழ்ச்சியின் பைனல்ஸ ஒளிபரப்பப்பட்டது. மேலும் ஏ.ஆர். ரஹ்மான், சிம்பு, சந்தோஷ் நாராயணன், அறிவு, தீ உட்பட பல பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். மக்களும் குக் வித் கோமாளி சீசன் முடிந்து விட்டதே என்ற சோகத்தில் தான் இருக்கின்றனர். அடுத்த சீசனுக்காக ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் மிகப்பெரிய வெற்றியடைந்திருக்கும் இந்த நிகழ்ச்சிக்கு பின்பு முக்கிய நபராக இருப்பவர் இந்த நிகழ்ச்சியின் இயக்குனர் தான்.

வெளியில் நான் பார்க்கும் கோமாளிகள், போட்டியாளர்கள் தவிர இந்த நிகழ்ச்சிக்குப் பின்பு ஒரு மிகப்பெரிய குழு வேலை செய்துகொண்டு இருக்கிறது. அப்படி இந்த நிகழ்ச்சி இயக்குனரை பலரும் பார்த்ததில்லை. இந்நிலையில் ஷிவாங்கி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நிகழ்ச்சியின் இயக்குனரை  அறிமுகம் செய்து வைத்துள்ளார். அவரது புகைப்படம் இதோ..!

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Cooku with comali director exposed குக் வித் கோமாளி இயக்குநர் இவர்தானாம்

People looking for online information on Cooku with comali will find this news story useful.